விக்ரோறியாக் கல்லூரிக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குமிடையிலான சிநேக
பூர்வ ஆட்டம், விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி அணியினர் 148 ஓட்டங்களுக்கு முழுமையாக ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரியணியினர் மிகுந்த சிரமத்துடன் ஆடி வெற்றியிலக்கை நோக்கி மெதுவாக நகர்ந்த போதும் 147 ஓட்டங்களுக்கு முழு இலக்குகளையும் இழந்து 01 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவிக்கொண்டனர்..