வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற எல்லே சுற்றுப் போட்டிகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பெண்கள் அணி முதலாமிடத்தைப் பெற்று சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் எல்லே போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.