நேற்று காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்புவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இப்பாடசாலையானது விக்டோரியாக்க் கல்லூரியின் ஊட்டல் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. சுழிபுரம் பிரதேசத்தினதும் விக்டோரியா கல்லூரியினதும் அபிவியிருத்தியை நோக்க்காகக்கொண்ட கல்வியபிவிருத்திக்குழு (EDC) முயற்சியால் திரு தா கமலநாதனின் நிதியுதவியுடன் (30,000/=) மாணவர்களுக்கு பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
பாடரீதியான முதன்மை மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் ஒழுங்காக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் போன்றோர் பரிசில் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.
EDC யின் தலைவரும் விக்டோரியா கல்லூரிஅதிபருமான திரு வ சிறிகாந்தன் பிரதம விருந்தினராகவும் EDC யின் பொருளாளர் திரு து ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வு பாடசாலை அதிபர் திரு பாலகுமார் தலைமையில் நிகழ்ந்தேறியது.
EDC யின் இம்முயற்சியால் இம்முறை அதிகளவு பெற்றோரும் கலந்துகொண்டது அவதானிக்ககூடியதாக இருந்தது.
பெற்றோரை கல்வியில் அதிக அக்கறை காட்ட வைத்ததும் மாணவர்களை ஊக்கப்படுத்தியதுமான இம்முயற்ச்சிக்கு சுழிபுரம் EDC யினரும் நிதியுதவிபுரிந்த திரு தா கமலநாதனும் கல்லூரி சமூகத்தினரால் உள்ளன்போடு பாராட்டப்பட்டனர்.