
எமது கல்லூரியின் ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. அக்ரோபர் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினத்தில் நவராத்திரி விழா ஆரம்பமாகியிருந்ததால் நேற்றைய நாள் அதனைப் பூர்த்தி செய்ததன் பின்னர்
இன்று பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.வி.உமாபதி (சமாதான நீதவான்) தலைமையில் வெகுவிமர்சையாக ஆசிரியர் தினம் நடைபெற்றது. கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியர்களான விக்ரோறியன் திரு.க.சிவதாசன், விக்ரோறியன் திருமதி.செ.தேவராஜா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளுடன் ஆசிரியர்களின் மதுரகானம்


இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது. பழைய மாணவர் சங்கத்தினாலும் உயர்தர மாணவர் ஒன்றியத்தினாலும் ஆசிரியர்கள் மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர். லீவு எடுக்காத ஆசிரியரும், காலையில் முன்னதாக பாடசாலை வரும் ஆசிரியரும், 25 வருட ஆசிரியப் பணியைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களும் ஆசிரியர் கழகத்தினால் மதிப்பளிக்கப்பட்டனர். ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியச் செயலாளர் திரு.தா.கமலநாதன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியினை பழைய மாணவர் சங்கச் செயலாளர்
திரு.இ.ஸ்ரீரங்கன் சபையில் வாசித்தார். விழா நிறைவின்போது ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மதிய போசன விருந்தும் வழங்கப்பட்டது.