வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற வருடாந்த உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் எமது கல்லூரியின் 14வயதிற்குட்பட்ட அணிவீரர்கள் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பழை Union College, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி போன்றவற்றை வெற்றிகொண்ட போதும் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரியை வெற்றி கொள்ளமுடியாமையால் மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டனர். இதன்மூலம் வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் 14வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றுக்கொண்டனர்.
கடந்த 10 வருடங்களுக்குப்பின்னர் மாவட்ட மட்ட உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கு எமது கல்லூரி அணி ஒன்று தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.