இலண்டனில் வசிக்கும் திரு .சி .ரவிசங்கர் அவர்கள் காலை உடற்பயிற்சி செய்யும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு வைகாசி மாதத்திற்குத் தேவையான சத்துள்ள உணவுகளான பால் ,பழம் போன்றவற்றை வாங்குவதற்கான பதினையாயிரம் ரூபா பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளார் .
வெளிநாடுகளில் வசிக்கும் எமது கல்லூரி பழைய மாணவர்கள் காலை உடற்பயிற்சி செய்யும் மாணவர்களை ஊக்குவிக்க விரும்பினால் நீங்களும் முன்வந்து உதவி செய்யலாம் .அப்படித்தொடர்பு கொள்ள விரும்பினால் விக்ரோறியாக் கல்லூரி அதிபருடன் அல்லது யுகே பழைய மாணவர் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளவும் .