எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் ஐம்பத்தி ஐந்து ஆசிரியர்களும் ,ஐந்து உதவியாளர்களும் மற்றும் நாள்தோறும் கல்லூரிக்கு வருகின்ற பார்வையாளர்களும் பாவிப்பதற்கு மலசலகூடம் இன்றியமையாததாக இருப்பதனால் உடைந்த நிலையில் இருந்த மலசலகூடத்தை புனரமைப்பதற்கு ஆர்வங்கொண்டு பிரித்தானியாவில் வசிக்கும் கல்லூரியின் பழைய மாணவன் சி.ரவிசங்கர் அவர்கள் அறுபத்தி ஏழாயிரம் ரூபாவை நன்கொடையாக வழங்கி புதிதாகச் சீரமைத்துக் கொடுத்துள்ளார். .
இவர் செய்து கொடுத்த இந்த வேலைத்திட்டத்தை பாராட்டி கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் ,யுகே பழைய மாணவர் ஒன்றியம் ஆகியோர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள் .
இப்படியான முக்கியமான வேலைத்திட்டங்களை கல்லூரிக்குச் செய்து கொடுக்க நாடுகடந்து வந்தும் நாம் கற்ற கால்லூரியை மறவாதிருக்கும் கல்லூரியின் பழைய மாணவர்கள் யாவரும் முன்வரவேண்டும் .யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் இணையத்தள மூலம் கல்லூரிக்குத் தேவையான வேலைத்திட்டத்தை அறிந்துகொள்ளலாம்