எமது கல்லூரியில் 2014ம் ஆண்டில் தரம் 6 வகுப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் இன்று றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. கடும் மழையின் மத்தியில் அனுமதிக்காக விண்ணப்பித்த பெற்றோர்கள் வருகை தந்திருந்தனர். அதிபர் அனுமதி சம்பந்தமான விபரங்களையும் கல்லூரியின் பாரம்பரியம், விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறி பிள்ளைகளை இடைநிலைக் கல்வியில் சிறப்பாக செயற்பட வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.பா.விஜயகுமார் அவர்கள் கல்லூரியின் தேவைகள் பற்றியும் பெற்றோரின் ஈடுபாடு பற்றியும் கூறினார். இம்முறை 154 மாணவர்கள் உரிய தகுதியுடன் தரம் 6 வகுப்பில் அனுமதி பெறவுள்ளனர்.