எங்கள் கல்லூரியில் 23 வருடங்கள் கல்விப்பணி செய்த ஆசிரியை திருமதி.அரியமலர் சற்குணசிங்கம் அவர்கள் தனது சேவையிலிருந்து இன்று ஓய்வுபெற்றுள்ளார். 1978ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்ட இவர் 1989ம் ஆண்டிலிருந்து எமது கல்லூரியில் கடமையாற்றியுள்ளார். கல்லூரியின் பழைய மாணவியான இவர் ஸ்தாபகர் குடும்பத்தினரின் உறவினரும் ஆவார்.
பகுதித்தலைவராகக் கடமையாற்றி கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக பல கடமைகளையும் ஆற்றியுள்ளார். 125வது ஆண்டு நிறைவை கல்லூரி கொண்டாடியபோது விழாக்குழுவின் உறுப்பினராக செயலாற்றியுள்ளார். இன்று அவருக்கு கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கல்லூரி அதிபரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவரது சேவையைப் பாராட்டி ஆசிரியை திருமதி.ப.யோகநாதன் அவர்களும் சிரேஸ்ட மாணவ தலைவி செல்வி.ஸ்ரீ.காருண்யா அவர்களும் உரையாற்றினார்கள். நிகழ்வின் இறுதியில் ஆசிரியை பதிலுரை வழங்கினார்.