Thursday, 31 January 2013

கல்வியை நோக்கி எமது பாதை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் தெரிகிறது. இந்த சந்தர்பத்தில் எமது பாடசாலையின் வளர்ச்சியில் நாம் பங்குகொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தை மீட்டுப் பார்க்கிறோம்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த சைவப்பிள்ளைகளும்  கல்விகற்க வேண்டும் என்ற உயரிய இலட்சியத்துடன் எமது பிரதேசத்தின் கல்வியின் பிதாமகர் அமரரர் நிற்சிங்கம் கனகரத்ன முதலியார் அவர்களால் 1876 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டு, அமரர் செல்லப்பா முதலியார் அவர்களாலும் அமரர் தம்பையா அவர்களாலும் நிருவகிக்கப்பட்டு வந்த எமது விக்டோ றியா கல்லூரிக்கு 136 வயதுகள்.

புகழ்பூத்த அதிபர்களையும் அர்ப்பணிப்புள்ள  பல ஆசிரியர்களையும் கண்ட எமது பாடசாலை, பலநூறு கல்விமான்கள் மற்றும் பல நல்ல மனிதர்கள் உருவாகி உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து புகழ் பரப்ப அடித்தளம் இட்ட பெருமையுடன் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றது.

பழைய மாணவர்கள் தமக்கு அறிவுப்பாலூட்டிய அன்னையை மறவாது, தமது  வருங்கால தம்பி தங்கையர் தம்மிலும் மேலான நிலைக்கு வரவேண்டும் என்ற ஒரேநோக்கத்திற்காக நேரடியாகவோ அவுஸ்திரேலியா, கனடா, லண்டன்  மற்றும் சுழிபுரம் பழைய மாணவர் சங்கங்களினூடக தம்மாலான உதவிகளைப் புரிந்து வருகின்றனர்.
 

அந்தவகையில் சுமார் 18 வருடங்களுக்கு முன்பு அந்நேர அதிபர் திரு சந்திரபாலன் அவர்களின் முயற்சியாலும் லண்டனில் வசித்து வந்த பழைய மாணவர்களது உத்வேகத்தலும் உருப்பெற்றதே எமது யூ. கே. பழைய மாணவர் ஒன்றியம்.

பாடசாலையின் பல்வேறு செயற்றிட்டங்களுக்கு உறுதுணையாக இருந்துவந்த எமது ஒன்றியம் கடந்த 10 மாத காலத்தில் உத்வேகம் பெற்று செயல்படுவது யாவரும் அறிந்ததே.

பாடசாலையின் கல்வி, விளையாட்டு,  கலை மற்றும் மாணவரின் ஆளுமை விருத்தி போன்றவற்றினைகக் கட்டிஎழுப்புவதை நோக்காகக் கொண்டே செயற்பட்டு வருகிறோம்.

சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிற்கு, திறமையும் அர்ப்பணிப்பும் மிக்க ஆசிரியர்கள், அடிப்படையறிவும் தன்னார்வமும் கொண்ட மாணவர்கள், கற்றலுக்கான  சூழல் மற்றும் இவையனைத்தையும் உச்ச அளவில் பயன்படுத்தும் (நிருவகிக்கும்) அதிபர் மற்றும் நிருவாகக்  கட்டமைப்பு என்பன அவசியமாகும்.

எம்மைப்பொறுத்தவரையில், எமது பாடசாலையில்,மிகச்சிறந்த அதிபர் மற்றும் ஆசிரியர் குழாம் என்பன உள்ளதோடு நிருவாகமும் மிகச்சிறப்பாகவே நடை பெறுகிறது.

ஆகவே, கற்றல் சூழல் மற்றும் மாணவரின் அடிப்படையறிவு என்பவற்றிலேயே  அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளதை  நாம் உணர்கிறோம்.

ஒப்பீட்டு ரீதியில் கற்றல் சூழலை உருவாக்குவது உடனடியாகச் செய்து  முடிக்கக்கூடியது.  மாணவர் அடைவு மட்டத்தை உயர்த்துதல் என்பது, எமது பாடசாலையில் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மாணவர் தரத்தை உயர்த்தல் மற்றும் புதிதாக தரம் 6 இல் தரமான மாணவர்களைச் சேர்த்தல் என்பவற்றிலேயே  தங்கியுள்ளது.

ஆகவேதான், எமது நிருவாகத்தின் முதல் ஆண்டுப் பகுதியின் பெரும் காலப் பகுதியினைக்  கற்றல் சூழலை உருவாக்குதலில் கவனம் செலுத்திகொண்டிருக்கிறோம்.

"றிஜ்வே" மண்டபப் புனரமைப்பு மற்றும்  நிறுவுனர் குடும்பத்தினருடன் இணைந்து புதிய சிற்றுண்டிச்சாலை அமைத்தல்  என்பவற்றினை, எமது பல்வேறு வேலைத்திட்டங்களுள் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மேலும், புதிதாகச் சேரும் மாணவர்களின் தரத்தினைக் கூட்டுவதற்காக சில வேலைத்திட்டங்களை மேற் கொண்டு வருகிறோம். குறிப்பாக, எமது ஊட்டற் பாடசாலையான ஐக்கிய சங்கம் மற்றும் பாரதி, நாவலர் முன்பள்ளி ஆகியவை இவற்றில் அட ங்கும். இவற்றின் அறுவடைக்காக நாம் சிறிது பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

எமது மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர எம்மாலான முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம். இவ்விணையத் தளம் உருவாக்கப் பட்டத்தின் பிரதான நோக்கமும் அதுவே.இவ்விணையத்தள குழுவின் (திரு ரவிசங்கருடன் சேர்த்து ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து செயல்படும் அனைவரின்) அர்ப்பணிப்பான செயற்பாடு பாராட்டுதலுக்குரியது.

இவ்விணையத்தளம் உருவானதால் ஏற்பட்ட  எதிர்பாராத இன்ப அதிர்ச்சியான விடயம் என்னவெனில், எமது பாடசாலையின் அனைத்து  வெளிநாட்டுப்  பழைய மாணவர் சங்கங்களும் (அவுஸ்திரேலியா, கனடா மற்றும் லண்டன்) புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்துள்ளன.


எதிர் காலத்தில் எமது கல்லூரி மாணவர்கள் எல்லோரும் கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும் என்பதே எமது அவா.
 
இறுதியாக, எமது பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்காக, எமது அதிபரினால் விடப்படும் வேண்டுகோள்கள், எம்மால் முடிந்தளவு நிறைவேற்றி வைக்கப்படும் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். 

Wednesday, 30 January 2013

A/L Results

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த க.பொ.தா. உயர்தர முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கணிதப்பிரிவில் 2A  B , உயிரியற்பிரிவில் 2B C (2 மாணவர்கள்)  , வணிகப்பிரிவில் 3A  (4 மானவர்கள் ) மற்றும் கலைப்பிரிவில் B 2C  சிறந்த பெறுபேறுகளாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்தவருடத்துடன் ஒப்பிடுகையில்   இவ்வருட முடிவகள் முன்னேற்றகரமாக அமைந்திருப்பது அனைவரது முயற்ச்சிக்கும் கிடைத்த பரிசாகவே கருதுகிறோம்.

மாணவர்களையும் ஆசிரியர்களையும் வழிநடத்திய அதிபர். அயராது பாடுபட்டுக் கற்பித்த ஆசிரியர்கள், பசி நோக்காது கண்துஞ்சாது கற்று சாதனை படை த்திருக்கின்ற மாணவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே. அதிபருக்கும், ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும்.பெற்றோருக்கும் யுகே பழைய மாணவர்கள் யாவரினதும் வாழ்த்துக்கள். 
செயலாளர்
யுகே பழைய மாணவர் ஒன்றியம். .



EDC Donating Computers

30.01.2013 அன்று பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் EDC அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் இரண்டு புதிய கணினிகள் அன்பளிப்பாகக் கையளிக்கப்பட்டுள்ளது .

இக்கணினிகள் பிரித்தானியாவில் வசித்து வரும் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .S. ரவிசங்கர் அவர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது .
இக்கணினிகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட விழாவினை மெய்கண்டான் பாடசாலை அதிபர் அவர்கள் தலைமை ஏற்று நடாத்தினார் .பிரதம விருந்தினராக விக்ரோறியாக் கல்லூரி அதிபர் வ .ஸ்ரீகாந்தன் அவர்களும் ,EDC அமைப்பாளர் திரு .DR.கண்ணதாசன் ,முன்னாள் அதிபர் திரு .சிவகணேசசுந்தரம் ,திரு .ஹரிதாஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இவ்விழாவில் கலந்து சிறப்புரை ஆற்றிய விக்ரோறியாக் கல்லூரியின் அதிபர் அவர்கள் இக்கணினியின் உபயோகத்தினால் மாணவர்களுக்கு எவ்வாறு நன்மை அளிக்கும் என்பதனையும் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் கணினி பற்றிய அறிவினைக் கொண்டிருக்க வேண்டும் என்பதனையும் தெளிவுபடுத்தினார் .
இன்று ICT ஒரு முக்கிய பாடமாக உள்ளது இதனைக் கருத்தில் கொண்டு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊடாக EDC அமைப்பாளர்கள் எமது கிராமப்பாடசாலைகளின் அபிவிருத்திக்காக தொடர்ந்தும் தமது சேவையைச் செய்வது மகிழ்ச்சி தரும் விடயமாகும் .
பண்ணாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் உதவி அதிபர் திருமதி .கலைராணி அவர்கள் பாடசாலையின் அபிவிருத்திக்காக தொடர்ந்தும் உழைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

அவர்களைப்போல் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவி உதவி அதிபரின் சகோதரி திருமதி .த .பகவதி அவர்கள் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாசாலையை நல்லதோர் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் .
அவர்களுடன் சேர்ந்து சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உப தலைவரும் ,யுகே பழைய மாணவர் சங்கத்தை உருவாக்குவதக்காக அயராது உழைத்தவரும் பண்ணாகம் அபிவிருத்தி சங்கத்தின் யுகே கிளையின் தலைவருமான திரு .சி .ஸ்ரீனிவாசன் அவர்களும் மெய்கண்டான் பாடசாலை அபிவிருத்திக்காக உழைத்து வருகின்றார்கள் .

கணினிகளை நன்கொடையாகக் கொடுத்த யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .சி .ரவிசங்கர் அவர்களுக்கு மெய்கண்டான் மகாவித்தியாலய நிறுவாக, EDC அமைப்பாளர்களும் ,யுகே பழைய மாணவர் ஒன்றியமும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது .
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .



Monday, 28 January 2013

க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகள் 30ஆம் திகதி

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார். அன்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.

அதேவேளை, அன்றைய தினமே அனைத்து பாடசாலைகளுக்கும் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெற்றது. பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களுக்கமைய இந்தப் பரீட்சையில் இரண்டு இலட்சத்து 20 ஆயிரத்து 535 பாடசாலை பரீட்சார்த்திகளும் 15 ஆயிரத்து 239 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றினர்.

Sunday, 27 January 2013

Canteen Project - Materials Arrived and officially started today

As informed yesterday the canteen project has started. Some of the materials arrived today. Work started after performing the pooja. Our principal Mr V.Srikanthan officially start the work today.

See Photos

Thursday, 24 January 2013

வருடாந்த மெய்வல்லுனர் போட்டி(2013)

விக்ரோறியாக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியை முன்னிட்டு இன்றைய தினம் மரதனோட்ட நிகழ்ச்சி இடம்பெற்றது. சுமார் தொண்ணூறு மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டி கல்லூரி முன்றலில் ஆரம்பித்து வழக்கம்பரை, சித்தங்கேணி, மாவடி, மூளாய் சந்தி ஊடாக சுழிபுரம் சந்தியை சென்றடைந்து கல்லூரி முன்றலில் நிறைவடைந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள்,
பழைய மாணவர்கள், பெற்றோர் என அதிகளவிலானவர்கள் வீதியோரங்களில் கூடிநின்று வீரர்களுக்கு உற்சாகமளித்தனர்.
 எண்பத்திஐந்து மாணவர்கள் போட்டியை முழுமையாக நிறைவுசெய்தனர். நிறைவுசெய்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்களும் இல்ல மெய்வன்மைப்போட்டியின் போது வழங்கப்படவுள்ளது.

Victoria College Videos are available now.

Videos on the ceremonial opening of the new IT lab, honouring of former Principal and guidance talk to students on further education are now available to view.

The OSA web team thanks Dr Kannathasan and the school administration for providing all the videos and photographs so quickly.

சிறந்த சமூக சேவையாளர்

சோழியபுரம் கிராமத்தில் பிறந்த மதிப்பிற்குரிய சமூக சேவையாளர் திரு .கா .இந்திரராஜா அவர்கள் தனது கல்வியினை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் மேற்கொண்டு அதே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியதுடன் உதவி அதிபராகவும் கடமையாற்றி ஒய்வு பெற்றுள்ளார் .பறாளாய் முருக பக்தரான அன்புக்குரிய திரு .இந்திரன் ஆசிரியர் அவர்கள் எமது சுழிபுரம் கிராமத்தின் வளர்ச்சிக்கும் ,கல்லூரியின் அபிவிரித்திக்கும் தொடர்ந்தும் அயராது உழைத்து வருவது அவரின் சிறந்த உயர்ந்த பண்பையும் ,பணியையும் எடுத்துக் காட்டுகின்றது .
இன்று எமது கல்லூரியின் மதிப்பிற்குரிய திரு .இந்திரராஜா ஆசிரியர் அவர்கள் சிறந்த மனிதராகக் கெளரவிக்கப்பட்டது யாவரினதும் பாராட்டிற்கு உரியதாகும் .
இவருடைய சேவை மேலும் ,மேலும் தொடர பறாளாய் முருகப்பெருமானை பிரார்த்திக்கின்றோம்.



தா . கமலநாதன்
செயலாளர்
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

முன்னாள் பிரதி அதிபர் திரு.எஸ்.கே.இந்திரராஜா கௌரவிப்பு‏


விக்ரோறியாக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் முன்னாள் பிரதி அதிபர் திரு.எஸ்.கே.இந்திரராஜா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இக்கௌரவிப்பினை அவுஸ்ரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம் நாடுகளிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
அவுஸ்ரேலியாவிலிருந்து திரு.அ.நித்தியானந்தமனுநீதி, திரு.சு.சத்தியகீர்த்தி, கனடாவிலிருந்து திரு.இ.விஜியநாதன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து திரு.அ.தயாபரன் மற்றும் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை, பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.பா.விஜயகுமார், பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு.இ.ஸ்ரீரங்கன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதி அதிபர் திரு.எஸ்.கே.இந்திரராஜா அவர்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, நினைவுச் சின்னங்கள் வழங்கி சிறப்பளிக்கப்பட்டார்.


Asaippillai Teacher Memorial IT Lab - Opening Ceremony‏

அவுஸ்ரேலிய பழைய மாணவர் சங்கத்தினால் எமது கல்லூரியில் உருவாக்கப்பட்ட கணனிக்கூடம் இன்று மாணவர் கற்றல் செயற்பாட்டுக்காக கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அவுஸ்ரேலியாவிலிருந்து
திரு.அ.நித்தியானந்தமனுநீதி அவர்களும் திரு.சு.சத்தியகீர்த்தி அவர்களும் இந் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்கள். இவர்களுடன் கனடாவிலிருந்து வருகை தந்த திரு.இ.விஜியநாதன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்த திரு.அ.தயாபரன் மற்றும் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை, முன்னாள் பிரதி அதிபர் திரு.எஸ்.கே.இந்திரராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.பா.விஜயகுமார், பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு.இ.ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விருந்தினர்கள் பட்டுச் சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டனர். திரு.அ.நித்தியானந்தமனுநீதி, திரு.சு.சத்தியகீர்த்தி, திரு.இ.விஜியநாதன் ஒன்றிணைந்து கணனிக்கூடத்தை திறந்துவைத்தனர். Asaippillai Teacher Memorial IT Lab பெயர்ப்பலகையினை திரு.அ.நித்தியானந்தமனுநீதி திரைநீக்கம் செய்துவைத்தார். குளிரூட்டிகளை திரு.இ.விஜியநாதன் இயக்கினார். திரு.அ.தயாபரன் கணனிகளின் செயற்பாட்டினை ஆரம்பித்துவைத்தார்.

கலந்துரையாடல்

இன்று விக்ரோறியாக் கல்லூரிக்கு வருகை தந்த திரு.அ.நித்தியானந்தமனுநீதி, திரு.சு.சத்தியகீர்த்தி, திரு.அ.தயாபரன் மற்றும் முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை ஆகியோர் அதிபரின் தலைமையில் மாணவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். உயர்கல்விக்கான பாடங்களைத் தெரிவுசெய்தல், தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல் போன்ற
மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கான பல விடயங்கள் இந் நிகழ்வின் போது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.

Wednesday, 23 January 2013

Australia OSA and EDC Completing another project worth approx 10 lakhs.

சுழிபுரம் விக்டோரியாக்  கல்லூரியில் இன்றுஒரு பொன்னான நாள். அவுஸ்திரேலியா பழைய மாணவர்ஒன்றியத்தின் முயற்சியால்,   எல்லோரது அன்புக்கும் மதிப்பிற்கும் காரணமான, திருமதி ஆசைப்பிள்ளை ஆசிரியர் ஞாபகார்த்த கணினிஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டதோடு,
வெளிநாட்டில் வதியும் பழையமானவர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணுவதால் கல்லூரி அபிவிருத்தியில் பாடுபடும் ஓய்வுபெற்ற பிரதியதிபர் திருகா. இந்திரராஜா அவர்கள் கௌரவிக்கப்பட் நிகழ்வும் நடந்தேறியுள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் லண்டன்பழைய மாணவர் ஒன்றியங்களால், பொன்னாடை போர்த்தி, சந்தனமாலை அணிவித்துநினைவுப்பரிசு வழங்கிதிரு இந்திரன் ஆசிரியர் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்
நிகழ்வில் உரையாற்றிய அதிபர்உயர்திரு  ஸ்ரீகாந்தன் அவர்கள், திருநித்தியானந்த மனுநீதி,. திரு,. விஜயநாதன், திருசத்தியகீர்த்திமற்றும் திரு . தயாபரன் ஆகியோர் பாடசாலைக்கு ஆற்றியஅரும்பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்துஅவுஸ்திரேலியாசார்பில் திரு நித்தியானந்த மனுநீதி,மற்றும் திருசத்தியகீர்த்தி ஆகியோரும், கனடாசார்பில் முன்னாள் ஓய்வுபெற்ற அதிபர்திருமதி வேலுப்பிள்ளை அவர்களும், லண்டன்சார்பாக திரு தயாபரன் அவர்களும் ஓய்வுபெற்ற பிரதியதிபர் திருகா. இந்திரராஜா அவர்களைக் கௌரவித்தனர்..
அதனைத் தொடர்ந்துதிரு நித்தியானந்த மனுநீதி,. திரு,. விஜயநாதன், திருசத்தியகீர்த்தி, திரு . தயாபரன்திருமதி வேலுப்பிள்ளை, திரு .ஸ்ரீரங்கன் மற்றும் அதிபர்ஆகியோர் மங்கள விளக்கேற்றதிரு நித்தியானந்த மனுநீதி,. திரு,. விஜயநாதன் மற்றும் திருசத்தியகீர்த்திஆகியோர், நாடவினை வெட்டிகணினி ஆய்வுகூடத்தினை மாணவர்களிடம் கையளித்தனர்.
திரு நித்தியானந்த மனுநீதி அவர்கள் பெயர்ப்  பலகையினைத் திரைநீக்கம் செய் துவைக்கதிரு . தயாபரன் அவர்கள் முதலாவது கணினியினை இயக்கிவைத்தார்.
குளிரூட்டப்பட்ட, அண்ணளவாக 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு இக்கணினி ஆய்வுகூடமானது, 11 கணினிகள் மற்றும் 1 பிரிண்டரினைக் கொண்டதோடு, அனைத்தும் வலையமைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கணிணிகளைப்  பயன்படுத்த முற்பட்டமை அவதானிக்கப்பட்டது

 

Saturday, 19 January 2013

வடபகுதி மாணவர்களுக்கு இந்தியாவின் புலமைப்பரிசில்

இந்திய அரசினால் வடபகுதி மாணவர்களுக்குப் பட்டப்படிப்பு புலமைப்பரிசில் திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக இந்திய துணைத்தூதரக அதிகாரி மகாலிங்கம் தெரிவித்தார். இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக  மேலும் தெரிவித்ததாவது:
ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில்கள் இளமாணிப் பட்டப்படிப்புகள், மருத்துவத்துறை, பொறியியல்துறை ஆகியவற்றில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில்களின் கீழ் நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தினால் மருத்துவம் தவிர்ந்த பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளியல்,வர்த்தகம் மானிடவியல் மற்றும் கலை ஆகிய துறைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும்.
இந்தப் புலமைப்பரிசில்களுக்கான இறுதித் திகதி பெப்ரவரி 10 ஆம் திகதி ஆகும்.
மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டம் பொறியியல், விஞ்ஞானம், பொருளியல், வர்த்தகம் மானிடவியல் மற்றும் கலைத்துறைகளுக்கான முதுமாணி பட்டப்படிப்புக்கானது. இந்தப் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை பெப்ரவரி 20ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பவேண்டும்.
ராஜீவ்காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பத்துக்கான இளமாணி பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை பெப்ரவரி 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.
ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பத்தின் ஒரு பிரதியை இந்தியத் துணைத் தூதரகம், 14, மருதடிலேன், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒரு விண்ணப்பதாரி ஒரு விண்ணப்பப் படிவத்தை மட்டுமே அனுப்பமுடியும்.
இளமாணிப் பட்டப்படிப்புகளுக்கான பொதுத் தகைமைகளாக க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்திருத்தல் வேண்டும். முக்கிய பாடங்களில் "பி' சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.
க.பொ.த. சாதாரண தரத்தில் ஆங்கில பாடத்தில் "பி' சித்தியைப் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரி முழு நேரமாக எந்தஒரு பல்கலைக்கழகத்திலோ அல்லது உயர் கல்வி நிலையத்திலோ  இளமாணிப் பட்டப்படிப்பு மாணவராகக் கல்வியைத் தொடர்பவராக இருக்கக்கூடாது.
விண்ணப்ப முடிவுத் திகதி அன்று விண்ணப்பதாரி 22 வயதுக்கு குறைந்தவராக இருப்பதுடன் இலங்கைப் பிரஜையாகவும் இருத்தல் வேண்டும். ஏனைய புலமைப்பரிசில்களாக ஐ.ஓ.ஆர்.ஏ.ஆர்.சி. புலமைப்பரிசில்களில் சுதேச வைத்தியத்துறை உட்பட அனைத்துக் கற்கை நெறிகளுக்கான முதுமாணிப் பட்டப் படிப்புகள், பொதுநலவாயப் புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம் தவிர்ந்த அனைத்துப் பாடங்களுக்கான முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகள், "சார்க்' புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம் தவிர்ந்த அனைத்துப் பாடநெறிகளுக்குமான முதுமாணிப் பட்டப்படிப்புக்கள் ஆகியவற்றுக்கு உயர்கல்வி அமைச்சு தகைமை வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
முழுமையாகப் பூர்த்தியாக்கப்பட்ட இளமாணி பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதிக்கு முன்னரும் முதுமாணிப் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதிக்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மருத்துவத்துறை, பொறியியல்துறைகளுக்கான கற்கைநெறிகளுக்கு நுழைவுப்பரீட்சைகள் நடைபெறும் என்றார்.

கைவிடப்படும் சிறுவர்கள் குடாநாட்டில் அதிகரிப்பு; 2012 இல் பெற்றோரைப் பிரிந்தவர்களின் எண்ணிக்கை 614

யாழ். மாவட்டத்தில், பெற்றோர்களால் கைவிடப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. கடந்த ஆண்டு, முன்னைய ஆண்டுகளைவிட அதிகளவில் அதிகரித்துள்ளது என்று யாழ். மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு 489 சிறுவர்கள் பெற்றோரால் கைவிடப்பட்டிருந்தனர். 2011 ஆம் ஆண்டு இது 491 ஆக அதிகரித்திருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு சடுதியாக அதிகரித்து, 614 சிறுவர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 14  சிறுவர்களும் வேலணை பிரதேச செயலர் பிரிவில் 9 சிறுவர்களும், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 7 சிறுவர்களும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 75 சிறுவர்களும், யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 23 சிறுவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 14 சிறுவர்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 25 சிறுவர்களும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 25 சிறுவர்களும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 30 சிறுவர்களும், தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 37 சிறுவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 32 சிறுவர்களும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 8 சிறுவர்களும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 18 சிறுவர்களும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 278 சிறுவர்களும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 19 சிறுவர்களும் கைவிடப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக, யாழ். மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக, யாழ். மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை கூறுகின்றனர்.

கடும் பனியில் (Snow) இங்கிலாந்து சிக்கித் தவிப்பதால், 3000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டன

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
சாலைகள், விமான நிலையங்கள், ரயில் தண்டவாளங்களில் பனி சூழ்ந்துள்ளது, இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக பிரபலமானதும், பரபரப்பானதுமான ஹீத்ரு விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.
பனி காரணமாக இந்த விமான நிலையத்தில் நேற்று மட்டும் 365 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓடு பாதைகளில் மலை மலையாய் குவிந்துள்ள பனியை 24 வாகனங்களில் ஊழியர்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் பிர்மிங்காம் விமானநிலையம், சவுத்டாம்டன் விமானநிலையத்திலும் பல விமானங்கள் இயக்கப்படவில்லை.
போக்குவரத்து முடங்கியதால் நாடு முழுவதும் 3,000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.
மேலும் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால், மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Thursday, 17 January 2013

வெளிநாட்டு மாணவர்களுக்கு வீசா வழங்க இங்கிலாந்து புதிய விதி முறை

வெளிநாட்டு மாணவர்கள் வீசாவினைப் பெற்றுக் கொள்வதற்கு இங்கிலாந்து பல்வேறு புதிய நடை முறைகளை அமூல்படுத்தவுள்ளது.
இதில் சில நாடுகள் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படித்து முடித்த பின் 2ஆண்டு வேலை செய்வதற்கான விசா வழங்குகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழஙகுவதற்கு இங்கிலாந்து பல புதிய விதிமுறைகளை அமூல்ப்படுத்தியுள்ளது.
குறிப்பாக தமது கல்வியை படித்து முடித்த பின் 2ஆண்டுகள் வேலை செய்வதற்காக வழங்கப்படும் விசா நடைமுறையினை இந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இரத்துச் செய்யப்படும் என்று இங்கிலாந்து குடியேற்றத்துறை அமைச்சர் டேமியன் கீரின் அறிவித்துள்ளார்.
இந் நடைமுறை மட்டுமன்றி இது மட்டுமல்ல இன்னும் பல புதிய விதிமுறைகள் அமுல்ப்படுத்தப்படும் இங்கிலாந்தில் படிப்பு முடிக்கும் மாணவர்கள் வேலை செய்ய விரும்பினால் அதற்கென தனியான விசாவினைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்களும் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பல்கலைக்கழகங்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

மாணவர்களினுடைய விசாக்களில் பல கெடுபிடிகளை அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கொண்டு வந்தன. அதனால் உயர் கல்வித் துறையில் இருந்து இந்த நாடுகள் வாபஸ் பெற்றன. இந்த நிலையானது இங்கிலாந்து அரசுக்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளன.

Wednesday, 16 January 2013

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் தரம் 06 அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்

கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை, பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளள.
கல்வி அமைச்சினால் வெளியடப்பட்டுள்ள புதிய வெட்டுப்புள்ளிகளின் விபரம் வருமாறு:

ஆண்கள் பாடசாலை
168 கொழும்பு டி.எஸ். சேனநாயக்க் கல்லூரி                                                               
160 மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி                                                                    
156 திருகோணமலை ஆர்.கே.எம். ஸ்ரீ கோணஸ்வரா இந்து மகா வித்தியாலம்
150 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி                                                                                         
150 பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி                                                                               
பெண்கள் பாடசாலை
166 கண்டி பதியூதீன் மகளிர் மகா வித்தியாலயம்                                                            
162 மட்டக்களப்பு வின்ஷன் மகளிர் உயர்தரப் பாடசாலை                                          
160 திருகோணமலை     ஸ்ரீ சன்முகா இந்து மகளிர் கல்லூர                                        
159 கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி                                                                          
155 யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை                                            
149 திருகோணமலை புனித மேரி கல்லூரி                                                                         
கலவன் பாடசாலை
163மாவனல்ல ஸாஹிரா மத்திய மகா வித்தியாலயம்                                              
159மாவனல்ல பதுரியா மத்திய மகா வித்தியாலயம்                                                    
157ஹட்டன் ஹைலண்ட் மத்திய மகா வித்தியாலயம்                                              
152 ஏறாவூர் அலிஹார் முஸ்லம் மகா வித்தியாலயம்                                               
151 கொட்டக்கல கேம்பிரிஜ் தமிழ் வித்தியாலயம்                                                         
150 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்                                          
150 ஹப்புக்கஸ்தலாவ அல்-மின்ஹாஜ் மத்திய மகா வித்தியாலயம்                   
150 கொக்குவில் இந்து வித்தியாலயம்                                                                                 
149 கெக்குணுக்கொல்லாவ முஸ்லிம் மகா வித்தியாலயம்                                      
148 காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயம்