![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
(கொழும்பு பம்பலபிட்டி, கொள்ளுப்பிட்டி பிரபல வர்த்தகர் ராம்ஜிலொட்ச் முதலாளி) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மலர்வு : 27 மார்ச் 1946 — உதிர்வு : 22 டிசெம்பர் 2012 சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அப்பாப்பிள்ளை அவர்கள் 22-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கதிரேசு மகேஸ்வரி(சின்ன கொழும்பு ஆச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவராணி அவர்களின் அன்புக் கணவரும், தயாபரி சச்சிதானந்தசிவம்(சிவதயா தமிழ் அச்சக உரிமையாளர்-சுவிஸ்), தயாபரன்(இலண்டன்), சிறீதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், சச்சிதானந்தசிவம்(சிவதயா தமிழ் அச்சக உரிமையாளர்-சுவிஸ்), ஜெயலட்சுமி(லண்டன்), சாந்தசொரூபி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், நிவாசினி, கேயூரன், தருணீசன் ஆகியோரின் அன்புச் செல்ல அம்மப்பாவும், நிர்மிதா, நீவிதா, நிசாங்கன், சந்தோஸ் ஆகியோரின் அன்பு செல்ல அப்பப்பாவும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியிலிருந்து 1.00 மணிவரை 55/1 Peterson Lane, Wellawatta என்ற முகவரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைப்பெற்று பின்னர் 3.00 மணியளவில் கல்கிசையில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|