எமது ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் ஐக்கியசங்க சைவ வித்தியாசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை சிறந்த தேர்ச்சியுள்ள மாணவர்களாகஆக்குவதற்கும் வித்தியாசாலையை அபிவிருத்தி அடைய செய்வதற்கும் ,முயற்ச்சிகள் எடுக்கப்பட உள்ளன .ஏனெனில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களில் சராசரி 50% ஆனா மாணவர்கள் ஆரம்பப் பாடசாலையான ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் இருந்தே கல்வி கற்பதற்காக வருகின்றார்கள் .இந்த அடிப்படையில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலர் ஆரம்பப்பாடசாலையான ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையை சிறந்த தரமான நிலைக்குக் கொண்டு வருவதற்காக தற்ப்போது முயற்ச்சிகள் எடுத்து வருகிறார்கள் .
இவர்களில் இந்த முயற்ச்சிக்கு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஒத்துழைப்பை நாடியுள்ளார்கள் .இந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக திரு . சி .ரவிசங்கர் அவர்கள் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊடாக முதல் கட்ட உதவியை செய்ய முன்வந்துள்ளார் .மேலும் பழைய மாணவர்கள் எல்லோரும் இந்தப் புதிய திட்டத்திற்கு தங்களாலான உதவியை செய்ய முன் வரவேண்டும் என்பதே
யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் எதிர்பார்ப்பாகும்