Thursday, 6 February 2014
Wednesday, 5 February 2014
Friday, 31 January 2014
மரதனோட்டம் 2014
எமது கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகளின் முன்னோடியாக நேற்றைய தினம் மரதனோட்டம் நடைபெற்றது. இதில் பங்குபற்ற விண்ணப்பித்த மாணவர்களில் உடற்றகுதியுள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை மூலம் தெரிவு செய்யப்பட்டார்கள். பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டி கல்லூரி முன்றலில் ஆரம்பமாகி சித்தன்கேணி சந்தியை அடைந்து அங்கிருந்து மாவடிச் சந்தி சென்று பின் மூளாய் சந்தியுடாக சுழிபுரம் காளுவன் சந்திக்கு வந்து மீண்டும் கல்லூரி வாசலில் நிறைவடைந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் மிகுந்த ஆதரவு வழங்கிய இம் மரதனோட்டப் போட்டியில் வெற்றிபெற்றவ|ர்களுக்கு “விக்ரோறியன்” திரு.இ.ஸ்ரீரங்கன் அவர்களின்அனுசரணையில் பணப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.போட்டியின் முடிவில் ஆசிரியர், பழைய மாணவர் மற்றும் உதவியாளர்களுக்கு காலை உணவு U.K பழைய மாணவர் ஒன்றிய தினூடக “விக்ரோறியன்” திரு.இரவிசங்கர் அவர்களின் அனுசரணையில் பரிமாறப் பட்டது.
குடிநீர் வசதிக்கு நிதியுதவி
எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் ஊட்டப்பாடசாலையான சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சரியான குடிநீர் வசதி இல்லாத நினையில் வித்தியாசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க EDC அமைப்பாளர்கள் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக அங்கத்தவர் திரு .சி .இரவிசங்கருடன் தொடர்பு கொண்டு இவ்வேலைத்திட்டம் பற்றி விபரித்தார்கள் .இந்த வேலைத்திட்டம் வித்தியாசாலை மாணவர்களின் அத்தியாவசிய தேவையாக இருப்பதினால் திரு .சி .இரவிசங்கர் அவர்கள் இவ்வேலைத்திட்டத்திற்கு 26,105/- ரூபாவை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் .இதற்காக ஐக்கிய சங்க வித்தியாசாலையின் அதிபர் திருமதி .M . குணபாலன் ,மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் அனைவரும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .
Tuesday, 28 January 2014
Annual Sports meet - 2014 Preparation
எமது கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் முன்னோடியாக பெரு விளையாட்டுக்களான துடுப்பாட்டம் (தோற்பந்து, மென்பந்து), உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எல்லே மற்றும் கரம், சதுரங்கம் போன்ற போட்டிகள் இல்லங்களுக்கிடையே நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31-01-2014) மரதன் ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது. அத்துடன் திங்கட்கிழமை (03-02-2014) மெய்வன்மைப் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. 10-02-2014ம் திகதி 400 மீற்றர் ஓடுபாதை அளவு கொண்ட மைதானம் மாணவர்களின் பயன்பாட்டுக்காக கையளிக்க பழைய மாணவர் சங்கம் ஊற்பாடுகளைச் செய்து வருகின்றது. கடந்த பல வருடங்களாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் 400 மீற்றர் ஓடுபாதை கொண்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பழைய மாணவர்களின் பங்களிப்புடன் இத் திட்டம் இவ் வருட இல்ல மெய்வன்மைப் போட்டிகளின் போது கைகூடவுள்ளதையிட்டு கல்லூரிச் சமூகம் மகிழ்ச்சியடைகின்றது.
Chess Competition
வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்படும் சதுரங்கப் போட்டிகளின் முதற்கட்டம் கோட்டமட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்றது. சங்காளைக் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மேற்படி போட்டிகள் விக்ரோறியாக் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. பெருமளவிலான மாணவர்கள் பங்கு கொண்ட இப் போட்டிகள் தனித்தனி வயதுப் பிரிவுகளாக நடாத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற பத்து மாணவர்கள் வலய மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அதிகளவிலான வெற்றிகளை விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர். போட்டிகளின் நிறைவில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் ஆளுநர் செயலக அலுவலர்களின் அழைப்பின் பேரில் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் வழங்கி கௌரவித்தார்.
Subscribe to:
Posts (Atom)