Saturday, 31 August 2013

News Letter 2013-Aug


Monday, 26 August 2013

Maalai Amuthu 2013 - In aid of Chulipuram Victoria College Fund

ஆதிஸ் தங்க நகை மாளிகை ஆதரவில் சுழிபுரம் விக்டோரோரியா கல்லுரி பழைய மாணவ சங்க ஆஸ்திரேலியா மெல்பேன் கிளையின் வருடாந்த மாலை அமுது நிகழ்வு தலைவர் திரு இளங்குமரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை (24/08/2013) டண்டினொங்கில் உள்ள மென்சஸ் மண்டபத்தில் நடைபெற்றன.இதில் பிரதம விருந்தினராக பழைய மாணவனும் அண்மையில் மெல்பேனில் இறைபதம் அடைந்த கல்லூரியின் முன்னால் ஆசிரியை திருமதி. மதியாபரணம் ( மதி டீச்சர் )இன் மகனுமான திரு ரவி ரவிச்சந்திரா OAM அவர்கள் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் திருமதி.மீனா இளங்குமரனின் மாணவர்களின் வரவேற்ப்பு நடனம் ,செல்வி.ருக்சிகா இளங்குமரன் கர்நாடக இசை கச்சேரி மற்றும் விக் சுந்தர் இசைக்குழுவின் பழைய புதிய சினிமா பாடல்கலும் இடம்பெற்றன.

 See Ebook

Friday, 23 August 2013


Excellent dance performance by Victoria College Students

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 16-08-2013 வெள்ளிக்கிழமை இரவு சப்பறத் திருவிழா நடைபெற்றது. இதன் போது நிகழ்ந்த விக்டோரியா கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியை விக்டோரியக் கல்லூரியின் நடன ஆசிரியை திருமதி ஸ்ரீதேவி,
முன்னால் சங்கீத ஆசிரியை பங்கயச்செல்வி ஆகியோர் சிறப்பாக மேடை ஏற்றினார்கள். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், Video உதவி புரிந்த கோணாத் அனைவருக்கும் U-K பழைய மாணவர் ஒன்றியம் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறது.

See Photos

Photograph by Kiruththiga Keerthi
   Video Konath

Wednesday, 21 August 2013



Sri Lanka Cricket Association - Cricket Tournament

இலங்கைத் துடுப்பாட்டச்சங்கம் நடாத்தும் துடு்ப்பாட்டப் போட்டிகளில் எமது கல்லூரியின் 17 வயது அணி பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியினை வெற்றி கொண்டு மூன்றாம் சுற்றில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளது. ஹாட்லிக்கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் மூன்று இலக்குகளால் விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லிக் கல்லூரி அணி 125 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. விக்ரோறியாக் கல்லூரி அணி சார்பாக பா.பிரதீஸ், சி.குகசாந்தன், இ.சிவராம் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினர். ஹாட்லிக் கல்லூரியின் க.அனந்தசயனன் அதிகளவாக 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்குக் களமிறங்கிய விக்ரோறியாக் கல்லூரி அணி ஏழு இலக்குகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சி.சிவசங்கர் 33 ஓட்டங்களையும் தி.செந்தூரன் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஹாட்லிக் கல்லூரி சார்பில் க.அனந்தசயனன் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். இதன் மூலம் விக்ரோறியாக் கல்லூரி அணி மூன்று இலக்குகளால் ஹாட்லிக் கல்லூரியை வெற்றி கொண்டு அடுத்த சுற்றில் கலந்துகொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

Sunday, 18 August 2013


Our Principal's Interview

விக்டோரியா கல்லுரி அதிபர் திரு.ஸ்ரீகாந்தன் அவர்கள் மெல்பேன் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சங்கநாதம் வானொலிக்கு அளித்த நேர்காணல்
See Video






SriLanka Cricket Association - Cricket Tournament 2013

 
இலங்கைத் துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் துடுப்பாட்டப்போட்டிகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. எமது கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி முதலாம் கட்டத்தில் கலந்துகொண்ட போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாம் கட்டப் போட்டிகளில் முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி (தேசிய பாடசாலை), சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றுடன் போட்டியிடவேண்டும்.
வெள்ளிக்கிழமை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியுடன் நடந்த துடுப்பாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய வித்தியானந்தாக் கல்லூரி 212 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 183 ஓட்டங்களை மட்டும் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி 158 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 117 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.விக்ரோறியாக் கல்லூரி சார்பில் செ.கிரிசாந் 31 ஓட்டங்களையும் ப.பிரதீஸ் 29 ஓட்டங்களையும் தி.செந்தூரன் 23 ஓட்டங்களையும் பெற்றனர். அ.மிதுசன் 21 ஓட்டங்களைக் கொடுத்து 04 இலக்குகளைக் கைப்பற்றினார்.
ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்காக மு.கார்த்திகேயன் 27 ஓட்டங்களை அதிகமாகப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் இ.சிவராம், ப.பிரதீஸ், சி.கோகுல்ராஜ், வை.கஜன் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளை வீழ்த்தினர். அடுத்த வாரம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியுடனான போட்டி நடைபெறவுள்ளது.

Sunday, 11 August 2013


Dr.Sakunthalai - Visit to our school

இன்று எமது கல்லூரிக்கு பழைய மாணவியான Dr.சகுந்தலை தனது குடும்பத்தினருடன் வருகைதந்தார். கல்லூரியில் கற்கும் காலத்தில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த இவர் ஒரு வைத்திய கலாநிதி ஆவார். அதிபர், உதவி அதிபர் ஆகியோரை சந்தித்து கல்லூரி வளர்ச்சி குறித்து கலந்துரையாடிய Dr.சகுந்தலை தான் கல்வி கற்ற கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் கற்பித்த ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்தார். தன்னை இன்றைய உயர்நிலைக்குக் கொண்டுவந்த விக்ரோறியா அன்னை குறித்து உற்சாகத்துடன் கருத்துக்களை பரிமாறிய அவர் ஆங்கிலம், கணனிக்கல்வி என்பவற்றில் மாணவர்கள் கூடுதலான கவனம் செலுத்த ஆவன செய்யுமாறும் அதற்குத் தாங்கள் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் கூறினார். Dr.சகுந்தலை அவர்கள் சுழிபுரம் பறாளாய் வீதி அமரர் சுப்பையா உடையார் அவர்களின் பேர்த்தியும் அமரர் சிவஞானம் அவர்களின் புத்திரியுமாவார்.

Friday, 9 August 2013


பழைய மாணவன் கல்லூரிக்கு விஜயம்

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திரு .க .மனோகரன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார் .
அத்துடன் கல்லூரியின் அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்களுடன் கல்லூரயின் நிலவரங்களைப் பற்றியும் ,கல்லூரியின் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றியும் கலந்துரையாடியுள்ளார் .மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தால் செய்து முடிக்கப்பட்ட" Ridge Way Hall "புனரமைப்பு ,புதிய சிற்றுண்டிச்சாலை போன்ற வேலைத்திட்டங்களை பார்வையிட்டுள்ளார் .அவர்களுடன் ஆனந்தகுமாரும் உடனிருந்துள்ளார் .இவருடைய இந்த விஜயம் நல்ல சுமூகமாக நிறைவடைந்துள்ளது .

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photo Set1

See Photo Set2


Ongoing Issuru Projects

இசுறு வேலைத்திட்டத்தின் கீழ் கல்லரியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன. மத்திய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதான நுழைவாயில், ஆண் பெண் மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் மற்றும் விசேட தேவையுள்ள மாணவர்களுக்குமான மலசலகூடங்கள் என்பவற்ிறன் வேலைகள் உரிய ஒப்பந்த காரர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

Tuesday, 6 August 2013


Anandhkumar - Visit to Principal's Residence

ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர் (SAS  Executive member) திரு.க.ஆனந்தகுமார் அவர்கள் எமது கல்லூரிக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின் அதிபர் அவர்களின் வீட்டிற்கும் குடும்பத்துடன் சென்றிருந்தார். அதிபர் குடும்பத்தினர் அவருக்கு இராப்போசன விருந்தளித்து மகிழ்ந்தனர். இவ்வேளையில் உபஅதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்களும் வருகை தந்திருந்தார். கல்லூரியின் வளர்ச்சி குறித்தும் தேவைகள் பற்றியும் அவர்கள் கலந்துரையாடினார்கள்.


நாவலர் முன்பள்ளியின் விளையாட்டுபோட்டி

சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் விளையாட்டுபோட்டி கடத்த 03/08/2013 நடைபெற்றது அதன் படங்கள்.

Photos


Monday, 5 August 2013


2013 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்

2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (05/08/2013) ஆரம்பமாகின்றது. அந்தவகையில் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் உதயன் இணைய செய்திப் பிரிவு  வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றது.

அதன்படி இன்று ஆரம்பிக்கப்படும் பரீட்சைகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையும். எனவே பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.



Guides - Camp Fire‏

விக்ரோறியாக் கல்லூரியின் பெண் சாரணியர்களுக்கான பாசறை கடந்த மூன்று தினங்களாக கல்லூரியில் நடைபெற்றது. இருபது பெண் சாரணியர்கள் கலந்து கொண்ட இப் பாசறையினை சாரணியப் பொறுப்பாசிரியைகளான திருமதி.தி.கதிர்காமநாதன், திருமதி.சு.பாலகுமார் ஆகியோர் நெறிப்படுத்தினர். வட மாகாண பெண் சாரணிய ஆணையாளர் திருமதி.கி.சிவராஜா உட்பட மாவட்ட மற்றும் வலய ஆணையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரி அதிபரின் ஆசியுடன் ஆரம்பமான பாசறையின் நிகழ்வுகளின் போது சாரணப் பொறுப்பாசிரியரும் காங்கேசந்துறை சாரண மாவட்ட துணை ஆணையாளரும் உப அதிபருமான திரு.செ.சிவகுமாரன் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். சாரணியர்கள் மிக உற்சாகத்துடன் பாசறையை முன்னெடுத்தனர். நிறைவு நாள் பாசறைத்தீ (Camp Fire) நிகழ்வில் கல்லூரி அதிபர் பிரதம விருந்தனராகவும் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.க.ஆனந்தகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். திரு.ஆனந்தகுமார் அவர்கள் வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்களின் உதவியுடன் கல்லூரியின் சாரணர் அமைப்பின் வளர்ச்சிக்காக உதவுவதாகக் கூறினார். சாரணியர்களுக்கிடையிலான போட்டிகளின் போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மிகச் சிறப்பாக இடம்பெற்ற பாசறை நிகழ்வுகளின் போது பெற்றோர், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

See Photos Set1

See Photos Set2

See Videos

Sunday, 4 August 2013


Victorian Ananthakumar spent his valuable time with our school‏

ஐக்கிய ராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.க.ஆனந்தகுமார் அவர்கள் எமது கல்லூரிக்கு வருகை தந்து மூன்று தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கடந்த 2ம் திகதி தவணை நிறைவு நாளில் கல்விசார் செயற்பாடுகளில் ஒன்றாக உயர்புள்ளி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசுகளை வழங்கினார். விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு பயிற்சிக்கான உடைகள், தொப்பிகள் போன்றவற்றை வழங்கினார். விளையாட்டு  வீர வீராங்கனைகளுக்கு செயலமர்வுகனை நடாத்தி ஒவ்வொரு விளையாட்டு வீரனும் உடல் தகுதியைப் பேணுதல், உணவுப் பழக்க வழக்கங்கள், விளையாட்டு மைதானத்தில் கைக்கொள்ளவேண்டிய பண்புகள், பயிற்சிகள் எனப் பல விடயங்களை கலந்துரையாடினார். மைதானத்தில் மாணவர்களுக்கு பல்துறை விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கினார். சாரண மாணவர்களுடன் கருத்தரங்குகளை நடாத்தினார்.கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற பெண் சாரணியர் பாசறையை தொடர்ந்து இன்று பாசறைத் தீ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்புரையாற்றி பெண் சாரணியர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார். விக்ரோறியாவில் பெறுமதியாக தனது மூன்று தினங்களை செலவு செய்து கல்லூரி மீது தான் கொண்ட பற்றுறுதியை வெளிப்படுத்தினார். கல்லூரிச் சமூகம் அவருக்கும் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்திற்கும் தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.

See Photos

Saturday, 3 August 2013


யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் இரண்டாவது நாள் துடுப்பாட்டப் பயிற்சி

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் எமது கல்லூரியில்நடைபெற்று வரும் இரண்டாவது நாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதியபயிற்சி முறைகளை யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவரான திரு.ஆனந்தன்அவர்கள் அளித்து
வருகின்றார்.துடுப்பாட்ட வீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சி முறைகளைக்கற்று வருகின்றார்கள் இப்பயிற்சி திடலுக்குத் தேவையான குளிர் பாண உதவிகளை திரு.இ.ஸ்ரீரங்கன்அவர்கள்
செய்து வருகின்றார் .அவருக்கு யுகே பழைய மாணவர் ஒன்றியம் தங்களதுநன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.

யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

See Photos

Thursday, 29 August 2013

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய தேர்த்திருவிழா (Full Video)

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழாவின் Full Video

Ther Thiruvizha  Part 01

Ther Thiruvizha  Part 02

Ther Thiruvizha  Part 03

Ther Thiruvizha Part 04

உறி அடி உத்சவம் 


Video By Dr S.Kannathasan

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய தேர்த்திருவிழா (Photos)

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழாவின் சில பதிவுகள்

See Photos

Photos taken by
Dr S.Kannathasan, Kiruththiga Keerthi, Kopi Bala

Monday, 26 August 2013

Maalai Amuthu 2013 - In aid of Chulipuram Victoria College Fund

ஆதிஸ் தங்க நகை மாளிகை ஆதரவில் சுழிபுரம் விக்டோரோரியா கல்லுரி பழைய மாணவ சங்க ஆஸ்திரேலியா மெல்பேன் கிளையின் வருடாந்த மாலை அமுது நிகழ்வு தலைவர் திரு இளங்குமரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை (24/08/2013) டண்டினொங்கில் உள்ள மென்சஸ் மண்டபத்தில் நடைபெற்றன.இதில் பிரதம விருந்தினராக பழைய மாணவனும் அண்மையில் மெல்பேனில் இறைபதம் அடைந்த கல்லூரியின் முன்னால் ஆசிரியை திருமதி. மதியாபரணம் ( மதி டீச்சர் )இன் மகனுமான திரு ரவி ரவிச்சந்திரா OAM அவர்கள் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் திருமதி.மீனா இளங்குமரனின் மாணவர்களின் வரவேற்ப்பு நடனம் ,செல்வி.ருக்சிகா இளங்குமரன் கர்நாடக இசை கச்சேரி மற்றும் விக் சுந்தர் இசைக்குழுவின் பழைய புதிய சினிமா பாடல்கலும் இடம்பெற்றன.

 See Ebook

Friday, 23 August 2013

Excellent dance performance by Victoria College Students

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 16-08-2013 வெள்ளிக்கிழமை இரவு சப்பறத் திருவிழா நடைபெற்றது. இதன் போது நிகழ்ந்த விக்டோரியா கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியை விக்டோரியக் கல்லூரியின் நடன ஆசிரியை திருமதி ஸ்ரீதேவி,
முன்னால் சங்கீத ஆசிரியை பங்கயச்செல்வி ஆகியோர் சிறப்பாக மேடை ஏற்றினார்கள். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், Video உதவி புரிந்த கோணாத் அனைவருக்கும் U-K பழைய மாணவர் ஒன்றியம் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறது.


See Photos


Photograph by Kiruththiga Keerthi
   
Video Konath

Thursday, 22 August 2013

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பொருமாள் ஆலய சப்பரத்திருவிழா(15.08.2013)


See Photos

Photograph by Kiruththiga Keerthi







Wednesday, 21 August 2013

Email ஐ கண்டுபித்த பெருமைக்குரிய தமிழ் மகன் - கலாநிதி சிவா அய்யாதுரை

Every students and old students must see.... great advice, great documentary

Emai ஐ கண்டுபித்த பெருமைக்குரிய தமிழ் மகன் - கலாநிதி சிவா அய்யாதுரை அவர்கலின் கருத்து.

Know the Trurh
Be the Light
Find Your Way



Advice from Dr Shiva
Take your culture to the western world, instead of taking the western world culture to your community.

He is the man who send the strong message to western world that
anyone can invent, any place, any time, anywhere.


https://www.youtube.com/watch?v=hBljIsdBddo

 https://www.youtube.com/watch?v=W2SufURVppg

https://www.youtube.com/watch?v=l9m5y7HvcMs


https://www.youtube.com/watch?v=SjpVpOrIzOI

 https://www.youtube.com/watch?v=-VY7kuET_T4&feature=player_detailpage

https://www.youtube.com/watch?v=fd7OjrVQiEg







Sri Lanka Cricket Association - Cricket Tournament

இலங்கைத் துடுப்பாட்டச்சங்கம் நடாத்தும் துடு்ப்பாட்டப் போட்டிகளில் எமது கல்லூரியின் 17 வயது அணி பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியினை வெற்றி கொண்டு மூன்றாம் சுற்றில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளது. ஹாட்லிக்கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் மூன்று இலக்குகளால் விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லிக் கல்லூரி அணி 125 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. விக்ரோறியாக் கல்லூரி அணி சார்பாக பா.பிரதீஸ், சி.குகசாந்தன், இ.சிவராம் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினர். ஹாட்லிக் கல்லூரியின் க.அனந்தசயனன் அதிகளவாக 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்குக் களமிறங்கிய விக்ரோறியாக் கல்லூரி அணி ஏழு இலக்குகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சி.சிவசங்கர் 33 ஓட்டங்களையும் தி.செந்தூரன் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஹாட்லிக் கல்லூரி சார்பில் க.அனந்தசயனன் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். இதன் மூலம் விக்ரோறியாக் கல்லூரி அணி மூன்று இலக்குகளால் ஹாட்லிக் கல்லூரியை வெற்றி கொண்டு அடுத்த சுற்றில் கலந்துகொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

Sunday, 18 August 2013

Our Principal's Interview

விக்டோரியா கல்லுரி அதிபர் திரு.ஸ்ரீகாந்தன் அவர்கள் மெல்பேன் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சங்கநாதம் வானொலிக்கு அளித்த நேர்காணல்
See Video

Thursday, 15 August 2013

**HIGH ALERT** MUST SHARE AS SOON AS POSSIBLE

Please take this very seriously. People have been receiving calls from+375602605281, +37127913091or any number starting from +375, +371 number one ring & hang up. If you call back it's one of those Numbers that are charged 15-30$ & they can copy ur contact list in 3sec & if u have bank or credit card details on your phone, they can copy that too. +375 is from Belarus From Afghanistan.. 371 is cod for Lativa...

Don't answer or call back. Please FORWARD AND SHARE this to your friends and family

 

நகர பாடசாலைகளுக்கு எமது பிள்ளைகளை அனுப்புவதால் எதிர் கொள்ளும் பிரச்சனைகள்.

12

Tuesday, 13 August 2013

அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்


image
இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து, ஏழ்மை நிலையினால் கல்வியை தொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ள அன்பர்களுக்கு இந்த அறிக்கையின் ஊடாக உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றது.
அவுஸ்திரேலியா மெல்பனை தலைமையகமாகக் கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கும் இந்தத் தொண்டு நிறுவனம், இலங்கையில் வடக்கு, கிழக்கு, மாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போரினால் தாய், தந்தை மற்றும் குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக உதவி வருகிறது.

முதலாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழக புகுமுக வகுப்பு ( க.பொ.த. உயர் தரம்) வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் இந்த உதவித்திட்டத்தினால் நல்ல பலனையும் பயனையும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியினைப்பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்து, பட்டமும் பெற்று தொழில் வாய்ப்புகளும் பெற்றுள்ளனர்.
போரில் தமது கால் இழந்த சில மாணவர்களும் இந்நிதியத்தின் ஆதரவுடன் தமது கல்வியை தொடருகின்றனர்.
ஒரு மாணவருக்கு உதவ விரும்பும் அன்பர் மாதாந்தம் கூ 21 அவுஸ்திரேலியன் வெள்ளிகளை வழங்குவதன் மூலம் ஒரு மாணவர், தனது கல்வியை நிறைவு செய்யும் வரையில் உதவமுடியும்.
உதவி பெறும் மாணவரின் பூரணவிபரங்கள் உதவும் அன்பருக்கு தரப்படுவதுடன், மாணவரின் கல்வி முன்னேற்றச்சான்றிதழ் மற்றும் உதவி பெற்றதை அத்தாட்சிப்படுத்தும் கடிதங்கள் முதலானவற்றையும் நிதியம் அன்பர்களுக்கு அனுப்பிவைக்கும்.
மாணவருக்கு உதவும் அன்பர்கள் விடுமுறை காலங்களில் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில், தாம் உதவும் குறிப்பிட்ட மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நடைமுறையினால் பல உதவும் அன்பர்கள் இலங்கை சென்று தாம் உதவிய மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் மேலதிக தேவைகளையும் கவனித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட சுனாமி கடற்கோளினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வன்னியில் நடந்த போரினால் பாதிப்புற்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மாணவர்களுக்கும் உதவி வழங்கியிருப்பதுடன், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி நலன்களை கவனித்து, அவர்களை விடுவித்து க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்பு பரீட்சைகளில் அவர்கள் தோற்றுவதற்கும் பெற்றோர்களிடம் இணைந்துகொள்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டமும் தகவல் அமர்வும் மெல்பனில்,
வேர்மன்ட் சவுத் சமூக இல்லத்தில் எதிர்வரும் 19-10-2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்
Vermont South Community House – Karobran Drive,
                                  Vermont South, Victoria 3133, Australia
E.Mail: kalvi.nithiyam@yahoo.com                       Web: www.csefund.org


Sunday, 11 August 2013

SriLanka Cricket Association - Cricket Tournament 2013

இலங்கைத் துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் துடுப்பாட்டப்போட்டிகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. எமது கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி முதலாம் கட்டத்தில் கலந்துகொண்ட போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாம் கட்டப் போட்டிகளில் முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி (தேசிய பாடசாலை), சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றுடன் போட்டியிடவேண்டும்.
வெள்ளிக்கிழமை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியுடன் நடந்த துடுப்பாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய வித்தியானந்தாக் கல்லூரி 212 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 183 ஓட்டங்களை மட்டும் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி 158 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 117 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.விக்ரோறியாக் கல்லூரி சார்பில் செ.கிரிசாந் 31 ஓட்டங்களையும் ப.பிரதீஸ் 29 ஓட்டங்களையும் தி.செந்தூரன் 23 ஓட்டங்களையும் பெற்றனர். அ.மிதுசன் 21 ஓட்டங்களைக் கொடுத்து 04 இலக்குகளைக் கைப்பற்றினார்.
ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்காக மு.கார்த்திகேயன் 27 ஓட்டங்களை அதிகமாகப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் இ.சிவராம், ப.பிரதீஸ், சி.கோகுல்ராஜ், வை.கஜன் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளை வீழ்த்தினர். அடுத்த வாரம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியுடனான போட்டி நடைபெறவுள்ளது.

Dr.Sakunthalai - Visit to our school

இன்று எமது கல்லூரிக்கு பழைய மாணவியான Dr.சகுந்தலை தனது குடும்பத்தினருடன் வருகைதந்தார். கல்லூரியில் கற்கும் காலத்தில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த இவர் ஒரு வைத்திய கலாநிதி ஆவார். அதிபர், உதவி அதிபர் ஆகியோரை சந்தித்து கல்லூரி வளர்ச்சி குறித்து கலந்துரையாடிய Dr.சகுந்தலை தான் கல்வி கற்ற கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் கற்பித்த ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்தார். தன்னை இன்றைய உயர்நிலைக்குக் கொண்டுவந்த விக்ரோறியா அன்னை குறித்து உற்சாகத்துடன் கருத்துக்களை பரிமாறிய அவர் ஆங்கிலம், கணனிக்கல்வி என்பவற்றில் மாணவர்கள் கூடுதலான கவனம் செலுத்த ஆவன செய்யுமாறும் அதற்குத் தாங்கள் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் கூறினார். Dr.சகுந்தலை அவர்கள் சுழிபுரம் பறாளாய் வீதி அமரர் சுப்பையா உடையார் அவர்களின் பேர்த்தியும் அமரர் சிவஞானம் அவர்களின் புத்திரியுமாவார்.

Friday, 9 August 2013

Differences makes the community split

மனிதர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள். -இனத்தாலும், குணத்தாலும், நிறத்தாலும், கருத்தாலும். ஒருதாய் மக்கள் என்றாலும் ஒட்டிப் பிறந்தவர்கள் என்றாலும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்தனி உடல், மூளை, சிந்தனை. எனவே,  ஒருவருடைய கருத்திற்கும் மற்றவருடைய எண்ணத்திற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். மாறுபட்ட வழிமுறைகளைக் கொண்டிருக்கும் இருவருக்கிடையே நடக்கும் கருத்துப் போராட்டமே முரண்பாடு ஆகும். குடும்பத்தில், சமூகத்தில், அலுவலகச் சூழலில், தொழில் செய்யும் இடத்தில், பொது சேவையில் என்று அனைத்து இடங்களிலும் கருத்து முரண்பாடு ஏற்படலாம்.

உண்மையில் முரண்பாடு என்பது இயல்பானதும், ஆரோக்கியமான உறவு முறைகளைக் கடைபிடிக்க வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுமாகும். ஆனால், முரண்பாட்டை முற்றவிட்டால் உறவுகளில் முறிவை ஏற்படுத்திவிடும். அதை மரியாதைக்குரிய முறையிலும் நேர்மறையாகவும் கையாளும்போது வளர்ச்சிக்கான வாய்ப்பாக இருக்கும். மேலும், இருவருக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் முரண்பாடுகளைக் கையாண்டு முடிவுக்குக் கொண்டுவரும் திறன்களைத் தெரிந்துகொண்டால் எந்தவொரு மாற்றுக் கருத்துகளையும் தைரியமாக எதிர்கொண்டு தனி வாழ்க்கையிலும், தொழில் சூழலிலும்,பொது சேவையிலும்  உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு வளர்ச்சி காணலாம்.


உறவுகளில் ஏற்படும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ளுதல்

மாறுபாட்டிலிருந்து முரண்பாடு தோன்றுகிறது. ஒருவருடைய மதிப்பீடுகளை, நோக்கங்களை, பார்வையை, யோசனைகளை, விருப்பங்களை, மற்றவர் மறுக்கும்போது முரண்பாடு தோன்றுகிறது. சிலநேரம் இது பெரிதாகத் தோன்றுவதில்லை. ஆனால், முரண்பாடுகள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போது தன்னுடைய பாதுகாப்பிற்கும் மதிப்பீட்டிற்கும் தனித்தன்மைக்கும் ஆபத்து என்று நினைக்கத் தோன்றுகிறது.  ஒவ்வொருவரும் பிறரால்தான்  புரிந்து கொள்ளப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், மதிப்பளிக்கப்பட வேண்டும், ஆதரிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். தனி வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் இணக்கமான உறவுமுறைகளை ஏற்படுத்திக் கொண்டாலும், கல்லுரி சமூகத்தில், பொது  வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்வது சவாலாக இருக்கிறது.

சாதாரணமாக நம் வீட்டில் தத்தித் தவழ்ந்து நடைபோடும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே நடைபெறும் போராட்டம் போன்றதுதான் இது. குழந்தை தெருவிற்கு வந்து ஓடி விளையாட விரும்புகிறது. ஆனால், பெற்றோர் குழந்தையின் பாதுகாப்பைக் கருதி அதைத் தடை செய்கிறார்கள். குழந்தை அடம் பிடிக்கிறது. தடையும், தடை மீறலும் பூசலுக்குக் காரணமாகிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களையும் கருத்துகளையும் மதித்து ஏற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதலில் ஏற்படும் பின்னடைவு இருவருக்கிடையே இடைவெளியை ஏற்படுத்துவதோடு வீண் விவாதங்களில் ஈடுபட்டு பிரிவை உண்டாக்குகிறது. வேலை செய்யுமிடங்களில் ஏற்படும் முரண்பாடு தொழில் தகராறுகளை (நீதிமன்ற வழக்கு) ஏற்படுத்துகிறது. பொது சேவைகளில் ஏற்படும் முரண்பாடு சமூக பிளவை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொருவரும் மற்றவரின் கருத்துகளை நடுநிலைமையோடு ஆய்ந்து புரிந்துகொண்டால் பிரச்சினைகளைத் தீர்த்து கூட்டு முயற்சியோடு உறவுகளைப் பலப்படுத்தும்  வழி திறக்கும்.

முரண்பாடு என்பது மறுதலித்தல் என்பதன் முற்றிய வடிவமாகும். அதாவது, மாற்றுக் கருத்துள்ள இருவரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ அச்சுறுத்தும் நிலையாகும்.

முரண்பாட்டை முளையிலேயே கிள்ளாவிட்டால் புரையோடிய புண்ணாகிவிடும்.

முரண்பாட்டைத் திறமையாகக் கையாண்டு தீர்வு காணாவிட்டால் உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டாக்கும்.

அதே நேரத்தில் முரண்பாட்டைத் திறமையாகக் கையாண்டு நம்பிக்கையையும் உறவையும் பலப்படுத்தினால் அதுவே வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும்.


முரண்பாட்டைக் கையாள குறைபாடான வழியும், சிறந்த வழியும்:

குறைபாடான வழிமுறை

1.  மற்றவரின் கருத்துகளை மதிக்கவும் ஏற்கவும் தகுந்த திறன் பெறாதிருத்தல்.

2. சீற்றம், கோபம், புண்படுத்தல், வெறுப்பான வெளிப்பாடுகள்.

3. நேசித்தவரை வெறுத்தல், விலக்குதல், தனிமைப்படுத்தல்,  அவமானப்படுத்தல், கைவிடுதல்.

4. சமாதானப்படுத்தவோ அவரின் நிலையிலிருந்து சிந்திக்கவோ திறனற்ற நிலை.

5. விரும்பத்தகாத விளைவுகளுக்கு அஞ்சி முரண்பாட்டைச் சந்திக்க மறுத்தல்.

சிறந்த வழிமுறை

1. மற்றவரின் கருத்துகளை மதிக்கவும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும் பெறுதல்

2.அமைதியாயிருத்தல், மறுக்காதிருத்தல், மரியாதை கொடுத்தல்

3. மன்னிக்கவும் மறக்கவும் தயாராயிருத்தல் மற்றும் சீற்றத்தைக் கைவிடுதல்

4. சமாதானத்தை எதிர்பார்த்து தண்டனையைத் தவிர்க்கும் குணம்.

5. முரண்பாட்டை நேர்கொள்வது இருவருக்கும் நன்மையே என்ற நம்பிக்கை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனும் முரண்பாட்டுத் தீர்வும்:

முரண்பாடுகள் வலிமையான உணர்வுகளைத் தூண்டிவிடுவதோடு மனக்காயத்தையும், ஏமாற்றத்தையும், உடல் - மன  நலக்கேட்டையும் விளைவிக்கும். முரண்பாடுகளை ஆரோக்கியமற்ற வழிகளில் கையாளும்போது கோபத்தையும், உறவு முறிவையும் சரிசெய்ய முடியாத விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆனால், சரியான வழியில் கையாளும்போது மற்றவர்களைப் புரிந்துகொள்வதோடு நம்பிக்கை மற்றும் உறவுகளை வலுப்படுத்தலாம்.

கணவன் மனைவியருக்கிடையே ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் விவாதம் ஏற்படுவதும் பிரிவதும் முரண்பாடுகளைக் கையாளும் திறன் இல்லாததே. வீட்டை ஒழுங்குபடுத்துவது உடையணிவதில் ரசனையில்லாமலிருப்பது போன்ற சிறு பிரச்சினைகளுக்குக்கூட சண்டை ஏற்படுகிறது.

அமைதியாக இருப்பதன் மூலம் மற்றவர்களின்  வார்த்தைகளையும் நடத்தைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு உறவாடலாம்.

உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உங்களுடைய தேவைகளை பயமுறுத்தாமலும் கோபப்படாமலும் தெரிவிக்கலாம்.

மற்றவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளுக்கும் பேசுவதற்கும் இடம்கொடுத்து கவனியுங்கள்.

மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் நடத்தைகளையும் தவிருங்கள்.
முரண்பாடுகள் அழுத்தும் சூழ்நிலைகள்: நீங்கள் சந்திக்கும் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அந்த நேரத்தில் சம நிலையிலும், ஒருமுகப்பட்டும், கட்டுப்பாடாகவும் இருப்பது முக்கியம். இல்லையென்றால் முரண்பாடுகளை முறையற்ற வழிகளில் கையாண்டு பிரச்சினை தீவிரமடையக்கூடும்.

மக்கள் பொதுவாக முரண்பாடுகளைக் கையாளத் தெரியாமல் கீழ்க்காணும் வழிகளில் தங்கள் உணர்ச்சிகளை  வெளிப்படுத்து கிறார்கள்.

நெருப்பின் மேல் நிற்பது : 'சுடுதண்ணியைக் காலில் ஊற்றிக் கொண்டதைப் போல' என்று சொல்வார்களே அதுபோல் உணர்ச்சிகள் சூடேறியும் முடுக்கி விடப்பட்டும் அதிக உணச்சிவயப்பட்டு ஓரிடத்தில் உட்காராமல் இருப்பது.

அதீத அமைதி :

எந்த உணர்ச்சியையும் வார்த்தைகளையும் வெளிப்படுத்தாமல் விலகியிருத்தல், மவுனம் காத்தல்.

மவுனப் போராட்டம்: இது இருவேறு உணர்ச்சிகளின் கலவையான வெளிப்பாடு. செயலற்ற வெளித்தோற்றமும் உள்ளுக்குள் புகைமூட்டமுமாக இருப்பது.

மன அழுத்தம் முரண்பாட்டைக் கையாளும் திறனைக் குறைக்கிறது. அதாவது,

அடுத்தவர்களின் உடல் மொழியைப் (body language) புரிந்துகொள்ள இயலாது.

ஒருவர் சொல்வதைக் கேட்கும் மனநிலை இருக்காது.

உங்கள் உணர்ச்சிநிலை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.

உள்மனத் தேவைகளோடு தொடர்பு இல்லாமை.

உங்கள் தேவைகளை தெளிவாக வெளிப்படுத்த இயலாமை.

நீங்கள் மன அழுத்தத்தோடு இருப்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

உங்கள் உடலின் ஏதேனும் ஒரு பகுதி அழுத்தமாகவோ இறுக்கமாகவோ உணரலாம்.

மூச்சு விடும்போது வயிறு மற்றும் மார்புப் பகுதி இயல்பாக அசையாமல் இருக்கலாம்.

முரண்பாடு உங்கள் நேரத்தையும் கவனத்தையும் உறிஞ்சிக் கொள்ளலாம்.

உணர்ச்சிகளைப்  பற்றிய விழிப்புணர்வு வேண்டும்

மற்றவர்களைப் பாதிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களை நீங்களே புரிந்து கொள்வதோடு உங்களைப் பாதிக்கும் காரணிகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

முரண்பாடு தீரும் வரை அந்த நோக்கத்திலிருந்து விலக வேண்டாம்.

தெளிவாகவும் திறமையாகவும் தொடர்பு கொள்ளுங்கள்.

மற்றவர்களை ஈர்த்து தாக்கத்தை ஏற்படுத்துங்கள்.
அய்ம்புலன்களையும் ஒருங்கிணைத்து முரண்பாட்டுச் சிக்கலைத்  தீர்க்கப் பழக வேண்டும்.

உங்கள் உணர்ச்சிகளோடு உங்களுக்கு  உள்ள உறவு ?

ஒவ்வொரு நிமிடமும் உணர்ச்சிகள் மாறி மாறி அலைமோதுகின்றனவா? அதை உணர முடிகிறதா?

உணர்ச்சிகள், உடல் ரீதியான உணர்வுகளைத் தூண்டி விடுவதாக, -அதாவது வயிறு மார்புப் பகுதிகள் அழுத்தப்பட்டதாக உள்ளதா?

கோபம், கவலை, பயம் , மகிழ்ச்சி போன்ற மெய்ப்பாடுகளைப் பொருத்தமான இடத்தில் பொருத்தமான முகபாவனையோடு வெளிப்படுத்த முடிகிறதா?

கடுமையான உணர்ச்சிகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் உங்களுக்கே தெரியும் வகையிலும் இருக்கிறதா?

முரண்பாடுகளைப் பற்றிய முடிவெடுக்க வேண்டியவரின் உணர்ச்சிகளுக்குக் கவனம் செலுத்த முடிகிறதா?

இவற்றில் ஏதேனும் அறியமுடியாத அளவுக்கு அனுபவமற்றதாக இருந்தால் உங்கள் மனவெழுச்சி குறைபாடுள்ளதாக இருக்கிறது என்று பொருள்.

முரண்பாட்டைத் தீர்ப்பதில் சொற்களற்ற தகவல் தொடர்பின் பங்கு:

முரண்படும்போதும் விவாதத்தின்போதும் முக்கியத் தகவல்கள் வார்த்தைகளில்லாமல் (nonverbal communication)  பரிமாறப்படுகின்றன. அதாவது, முகபாவனைகள், தோரணைகள் சைகைகள், அசைவு, குரலின் கடுமை.

மனிதர்கள் மனக் குழப்பத்திலிருக்கும்போது பிரச்சினைகளைச் சொல்வதற்கு வார்த்தைகளை மிகக் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். ஒன்றைக் கேட்டு அதை உணரும்போது அதை நம்முடைய தேவைகள் உணர்ச்சிகளோடு தொடர்புப்படுத்திக் கொள்கிறோம்.

நீங்கள் முரண்பாட்டின் மய்யத்திலிருக்கும்போது அடுத்தவர்களின் சொற்களற்ற குறியீடுகள் அவர்கள் உண்மையில் சொல்ல வருவது என்ன? எப்படி மறுமொழிகிறார்கள்? என்று தெரிவிப்பதை உணர்வீர்கள். அது பிரச்சினையின் ஆணி வேரைக் காட்டுவதோடு புதிய நம்பிக்கையைக் கொண்டு வரும். சின்ன ஒலி, நம்பிக்கையூட்டும் தொடுதல், ஆர்வமான முகபாவனை போன்றவை இறுக்கம் தளரும் வழியில் நீண்ட தூரம் அழைத்துச் செல்லும்.

உங்கள் மனவெழுச்சி பற்றிய அறிவுதான் மற்றவர்களின் மெய்ப்பாடுகளைப்  (emotions) புரிந்துகொள்வதற்கு உதவும் - வார்த்தைகளற்ற குறியீடுகளைப் புரிந்துகொண்டு முரண்பாடு களைத் தீர்க்கும்.

முரண்பாட்டைத் தீர்க்க என்ன செய்யலாம்?

சொன்னதும் புரிந்துகொண்டதும்:
சில வார்த்தைகள் சூழ்நிலைக்கேற்பவும் பேசுபவர் அல்லது கேட்பவரின் மனநிலைக்கேற்பவும் பொருள் கொள்ளப்படும். எனவே. சொல்லப்படும் வார்த்தைகளை சூழ்நிலையோடு ஒப்பிட்டு மற்றவரின் நிலையிலிருந்தும் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அது உறவுகளைப் பலப்படுத்த உதவும்.

வெற்றி முக்கியமல்ல :
உறவுகளை வலுப்படுத்துவதும் தொடர்வதும்தான் முக்கியமே தவிர விவாதத்தில் வெற்றியடைவதோ தன்னுடைய முடிவே  சரியானது என்று நிறுவுவதோ அல்ல. மற்றவர்களின்  கோணத்தில் வெளிப்படும் கருத்தை மதிக்க வேண்டும்.

பழைய விஷயங்களைக் கிளற வேண்டாம்:
பழைய வலிகளையும் பகையையும் நினைத்துக் கொண்டிருந்தால் இப்போதுள்ள சூழ்நிலையின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்காது. இப்போது என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுங்கள்.

முரண்பாட்டை மதிப்பிடுங்கள்
முரண்பாடு உங்கள் சக்தியை வீணடித்துவிடும். நீங்கள் முரண்படும் காரணம் உண்மையில் அதற்கான மதிப்புடையதா? அல்லது வீண் வீராப்புக்காக அப்படி நடந்துகொள்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்கள் வீட்டுக்குப் போகும் வழிகள் பல இருந்தாலும் இந்த வழியில்தான் போவேன் என்று அடம் பிடிக்க வேண்டுமா? மாற்று வழியில் உங்களுக்கு சில ஆச்சரியங்கள் காத்திருக்கலாம்.

மன்னிக்கத் தயாராக இருங்கள்: 
நீங்கள் மன்னிக்க விருப்பமில்லாமலோ மன்னிக்க இயலாதவராகவோ இருந்தால் முரண்பாட்டைத் தீர்ப்பது  என்பது இயலாத காரியம். ஒருவரைத் தண்டித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துவிடுவது, பின்னர் ஈடு செய்ய முடியாத இழப்பையும் காயத்தையும் ஏற்படுத்தும்.

விலகிப் போக முடிவெடுங்கள்:

ஒரு முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலையில் ஒத்துப் போவதில்லை என ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். அதாவது, பிரிவதென முடிவெடுத்து அவரவர் வழியில் செல்லுங்கள்.

அமைதியாக இருத்தல்:
சிக்கலான தருணத்தில் அதிகப்படியாக செயல்படாதீர்கள். அமைதியாக இருப்பதன் மூலம் உங்களுடைய கருத்துகளை மற்றவர்கள் பரிசீலிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

ணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துங்கள். 
செயல்களால் அல்ல: ஒரு  விஷயத்தை உண்மையாகவும்  நேரடியாகவும் நீங்கள் தெரிந்து வைத்துள்ள வலிமையான தகவல் தொடர்பு நுட்பம் மூலம் வெளிப்படுத்தலாம். அதே சமயம் நீங்கள் மிகக் கோபமாகவோ சோர்வடைந்தோ உள்ளபோது  உங்களை நிலைப்படுத்திக் கொள்ள நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு நடை, சிலமுறை ஆழ்ந்த மூச்சு,செல்லப் பிராணிகளோடு விளையாட்டு, வேறு உங்களுக்குப் பிடித்த -அந்த சமயத்தில் பயன் தரும் செயல்களைக் கையாளுங்கள்.
உங்களுக்குப் பிரச்சினையாக இருப்பதை மட்டும் கவனியுங்கள். பொதுவாக குற்றம் கூறிக் கொண்டிருப்பது வேலையைக் கடினமாக்கும்.

ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினையை மட்டும் கையாளுங்கள்:
ஒரு விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு விஷயத்தைப் புகுத்தாதீர்கள். இதனால் எந்தப் பாத்திரத்தை முதலில் தேய்த்துக் கழுவுவது என்பது போன்ற (kitchen sink effect ) குழப்பம்  ஏற்படாது.

அடி வயிற்றில் அடிக்காதீர்கள். 
தனிப்பட்ட முறையில் உணர்ச்சி வயப்படக் கூடிய விஷயங்களை விட்டுவிடுங்கள். அது அவ நம்பிக்கையையும், கோபத்தையும், சேதங்களையும் உண்டாக்கும்.

குற்றம் சாட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள்
அது அவர்கள் திருப்பித் தாக்குவதற்கு வழிகோலும். மாறாக, அவர்களின் எந்தச் செயல் உங்களைப் பாதிப்படையச் செய்தது என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

பொதுவாகச் சொல்லாதீர்கள்: 
'எப்போதும்' அல்லது 'எப்போதுமில்லை' என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தா தீர்கள். அது துல்லியமில்லா மலும் கோபத்தை அதிகப்படுத்துவதாகவும் இருக்கும்.

திரித்துக் கூறாதீர்கள்:
புதிதாகக் குற்றம் கண்டுபிடிக்க முயற்சி செய்வதும், திரித்துக் கூறுவதும் சமாதானத்தை நோக்கிப் போவதைத் தடுக்கும்.

குப்பை சேர விடாதீர்கள்:
புகார்களையும் உணர்வுக் காயங்களையும் உடனே தீர்க்காவிட்டால் மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் பிறகு அதைப் புரிந்துகொள்வதும் சிக்கலைத் தீர்ப்பதும் கடினமாக இருக்கும்.

நீண்ட மவுனம் தேவையில்லை:
ஒருவருக்கு நீண்ட காலமாக சரியான சமாதானம் சொல்லாமல் மவுனம் காப்பது கோபத்தைக் கிளறும். இரு தரப்பு தகவல் பரிமாற்றம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

தெரியப்படுத்துங்கள்:
உங்களுடைய செயல்கள் மூலமாகவும் சொற்கள் மூலமாகவும் எதிர் தரப்பினரும் பொதுவான முரண்பாட்டுக் கள விதிகளைத் தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் செய்யுங்கள்.

நேர்மையான சண்டை: படிப்படியாக.....
குறிப்பிட்ட ஒரு முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நேர்மையான போர்க்களத்தைப் பயன்படுத்தலாம்.



படி.1.
பிரச்சினையை ஆரம்பிப்பதற்குமுன் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உண்மையில் என்னைத் தொல்லைப் படுத்துவது எது? மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யாமலிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்? என்னுடைய மனநிலை பிரச்சினைக்குச் சம்பந்தமுடையதா?

படி.2.
பிரச்சினையை ஆரம்பிப்பதற்குமுன் உங்களுடைய நோக்கத்தைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உண்டாகக்கூடிய விளைவுகள், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா? என யோசியுங்கள்.

படி. 3 .
இந்தச் பிரச்சினை 'வெற்றி' யை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, இருதரப்பும் மன நிறைவடையவும் சிக்கலுக்குத் தீர்வு காணவுமே என்பது நினைவிலிருக்கட்டும்.

படி. 4 .
உங்களுடன் முரண்படும் உங்கள் பங்காளியுடன் இது குறித்துப் பேசுவதற்கு நேரம் குறிப்பிடுங்கள். இது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகவும், இருவருக்கும் ஏற்ற நேரமாகவும் இருக்க வேண்டும்.
உடனே நேரம் குறிப்பது  எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

படி. 5.
பிரச்சினையைத் தெளிவாக எடுத்து வையுங்கள். உண்மையில் உள்ள நிலையை உங்கள் மன நிலையில் சொல்லுங்கள். 'நான்' வருத்தத்திற்குள் ளானேன், காயப்பட்டேன்,  மனச் சோர்வடைந்தேன்...  என்பது போல பேசுங்கள். 'நீ' என்ற வார்த்தையைத் தவிர்த்துவிடுங்கள். அதாவது, "நீ என்னைக் கோபப்படுத்தினாய்".... என்பது  போல.

படி.6.
உங்களோடு முரண்பட்டிருக்கும் ந(ண்)பரைக் கூப்பிடுங்கள். அவருடைய பார்வையில் அவரின் கருத்துகளை எடுத்துவைக்கச் சொல்லுங்கள். குறுக்கிடா தீர்கள். அவருடைய கருத்துகளை உண்மை யாகக் கருத்தூன்றி காது கொடுத்துக் கேளுங்கள். அது பயனளிப்பதாகத்  தெரிந்தால் அதை  மீண்டும் நீங்கள் புரிந்துகொண்டவாறு கூறுங்கள். பிறகு, அவரையும் அதைப் போலவே செய்யச் சொல்லுங்கள்.

படி. 7.
எதிர்த் தரப்பினரின் பார்வையில் பிரச்சினையைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். 'எதிர்க்கும்' பார்வை ஒரு வேளை கருத்தொற்றுமைக்கு வழி கோலக்கூடும்...

நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட!

படி. 8.
குறிப்பிட்ட தீர்வை முன்வையுங்கள். அதே போல் மற்றவர் களையும் தீர்வை முன்வைக்கச் சொல்லுங்கள்.

படி. 9. 
இரு தரப்பு  கருத்துகளின் நிறை-குறைகளை விவாதியுங்கள்.

படி. 10.
ஒரு சமாதானத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். ஒரே வழிதான் இருக்கிறது என்று எதிர்த் தரப்பை நெருக்காதீர்கள்.

ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தபின் கொண்டாடுங்கள். புதிய மாற்றத்தை நடை முறைக்குக் கொண்டு வாருங்கள் . சில காலக் கெடுவுக்குப்பின் புதிய நடைமுறையிலுள்ள குறை-நிறைகளைப் பற்றி விவாதியுங்கள். தேவை என்றால் மீண்டும் பேசி புதிய முடிவுக்கு வாருங்கள்.

சில நேரம் நம்முடைய இந்த அணுகுமுறை பலனளிக்காமல் போகலாம். அப்போது அனுபவமிக்க வல்லுநரை அணுகலாம். அவர்கள் சிறந்த சாத்தியமுள்ள வழிகளை ஆற்றல் மிக்க முறையில் விளக்கி தீர்வை நோக்கி அழைத்துச் செல்வார்கள்.

முரண்பாடு என்பது இயல்பானது,  வரவேற்கத்தக்கது, நலமான உறவுமுறை என்ற (குறிப்பாக பொது சேவை) நோக்கத்திற்குத் தேவையானது. இதை சிறப்பாகக் கையாண்டால், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், ஆகியோருடன் உள்ள பிணைப்பு வலுவாகவும் நீடித்தும் இருக்கும்.

Strong friendships and strong relationships are the back bone of the community.

Regards
Human Research Team
Victoria College Old Students