Thursday, 28 February 2013

Robert Stephenson Smith Baden Powell Day (District Level)‏

காங்கேசன்துறை மாவட்டச் சாரணர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பேடன்பவல் நினைவுதின நிகழ்வுகள் எமது கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் மாவட்ட ஆணையாளர் திரு.ந.ரவீந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றன.

சங்கானை கல்விக் கோட்டப் பணிப்பாளர் செல்வி.அ.சா.மரியாம்பிள்ளை பிரதம விருந்தினராகவும் எமது கல்லூரி அதிபர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். நிகழ்வுகளை காங்கேசன்துறை மாவட்ட உதவி ஆணையாளரும் எமது கல்லூரி சாரண ஆசிரியருமான திரு.செ.சிவகுமாரன் ஒழுங்கமைத்திருந்தார்.
           எமது கல்லூரி அதிபர் தனது சிறப்பு விருந்தினர் உரையில், விக்ரோறியாக் கல்லூரியின் சாரணர் இயக்கம் மிகவும் பழைமை வாய்ந்தது எனவும் இங்கு தலைமை தாங்கும் திரு.இரவீந்திரன் அவர்களும் மாவட்ட உதவி ஆணையாளரும் கல்லூரியின் உபஅதிபருமான திரு.சிவகுமாரன் அவர்களும் கல்லூரியின் பழைய மாணவர்கள், இங்கு கற்ற காலத்தில் சாரண இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்கள் எனவும்
1980களில் திரு.குணரட்ணம் ஆசிரியர் அவர்கள் சாரணருக்குப் பொறுப்பாயிருந்த காலத்தில் எமது கல்லூரியில் கல்வி கற்ற திரு.சி.சீனிவாசகம் முதலாவது ஜனாதிபதி சாரணராக விருது பெற்ற  பெருமைக்குரியவர் என்பதை நினைவுகூர்ந்ததுடன் திரு.சீனிவாசகம் கல்லூரியின் சாரணர்களின் தலைவராக கடமையாற்றிய காலத்தில் சாரண இயக்கம் இங்கு சிறப்பாக செயற்பட்டதையும் கூறி அந்நிலையை மீண்டும் கட்டியெழுப்ப தற்போது அடித்தளமிடப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.
         பிரதம விருந்தினர் மற்றும் மாவட்ட உதவி ஆணையாளர் உட்பட பலரும் உரையாற்றினர். பேடன் பவல் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் சாரணர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


 
 

Wednesday, 27 February 2013

நிர்வாக சபைக்கூட்டம்



யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக சபைக்கூட்டம் 24.02.2013 அன்று தலைவர் திருமதி  .பகவதி .தணிகாசலம் தலைமையில் Harrow வில் நடைபெற்றது .
ஒன்றியத்தின் நிர்வாக சபைக்கூட்டத்திற்கு பொருளாளர்,மற்றும் 10 உறுப்பினர்கள் சமூகமளித்து இருந்தனர்.
மேலும் இக் கூட்டத்தில் எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் அபிவிருத்தி சம்பந்தமாக பல விடையங்கள் ஆராயப்பட்டு நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டது.குறிப்பாக கல்லூரியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் சிற்றுண்டிச்சாலை கட்டுமான வேலைகள் நல்ல முறையில் நிறைவேற நிர்வாகக் குழு ஆதரவினைத தந்துள்ளது.இந்தக் கூட்டம் நல்ல முறையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
"ஒன்றாய்க் கூடுவோம் நன்றே செய்வோம்"

தாமோதரம்பிள்ளை-கமலநாதன்,
காரியதரசி,
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

Tuesday, 26 February 2013

சுழிபுரத்தில் 2 மோட்டார் குண்டுகள் மீட்பு

யாழ்.சுழிபுரம் பகுதியில் பாரிய ஆபத்தினை ஏற்படுத்திக் கூடீய 2 மோட்டார் குண்டுகள் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
யாழ்.சுழிபுரப் பகுதியில் பாவணைக்கு உட்படுத்தப்படாத வெற்றுக் காணி ஒன்றினை துப்பரவு செய்வதற்காக சென்றவர்கள் குறித்த மோட்டார் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

இதன் பின்னர் அப்பகுதி கிராம சேவகர் ஊடாக வட்டுக்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் குண்டினை இனங்கண்டனர்.
இதன் பின்னர் சிறிலங்கா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் மோட்டார் குண்டுகளை மீட்டுச் சென்றுள்ளனர்.

Monday, 25 February 2013

நினைவஞ்சலி நிகழ்வு - அமரர்.ந.சிவசண்முகமூர்த்தி‏

விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவனும் முன்னாள் ஆசிரயருமான அமரர் நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் கதாப்பிரசங்கக் கலை நூல் மற்றும் நாட்டார் பாடல் இறுவட்டு வெளியீடும் கல்லூரி அதிபர் தலைமையில் றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்.கலாநிதி.நா.சண்முகலிங்கன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.நாச்சியார் செல்வநாயகம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு.ச.கௌரிகாந்தன், ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் சு.கணபதிப்பிள்ளை, வடமாகாணக் கல்வித் திணைக்கள உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ச.கைலாசநாதன், சட்டத்தரணி நா.அரியபுத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலியுரைகளை வழங்கினார்கள்.


Saturday, 23 February 2013

Internet, Twitter and Facebook



யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் இயங்கிவரும் எமது விக்ரோறியாக்கல்லூரியின்  இணையத்தளம் இன்றுடன் பத்து மாதகாலப் பகுதியில் கல்லூரியின் நிலவரங்கள் எல்லாவற்றையும் உண்மை உணர்வோடு எழுதி வருவது யாவரும் அறிந்ததே .எமது
இணையத்தளத்தின் செயற்பாடுகள் அனைத்தும் கல்லூரியின் அபிவிருத்திக்காக மாணவர்களின் கல்வி ,விளையாட்டு ,கலைப்பாடங்கள் போன்றவற்றின் அதிவிசேட சிறப்புச் செய்திகளை எழுதிவருகின்றது .
எமது இந்த இணையத்தளத்தை 19483 தடவைகள் கலோரியின் விக்ரோறியன்கள் பார்த்துள்ளார்கள் .எமது இணையத்தளம் இந்த இணையத்தளம் கல்லூரியின் வளர்ச்சிக்காக வெற்றிநடை போட்டுக்கொண்டு இயங்கி வருகையில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் பழைய மாணவர்கள் யாவரையும் ஒன்றாக இணைக்கும் நோக்கத்துடன் எமது கல்லூரியின் எமது பழைய மாணவர் ஒன்றியத்திற்கு புதிய அங்கத்தவர்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்க்காகவும் Face Book , Twitter போன்ற போன்ற முக இணையங்களை அறிமுகப்படுத்தி இன்றுவரை 345 பழைய மாணவர்கள் இதில் இணைந்துள்ளார்கள் .

எமது இணையங்களில் அனைத்து செய்திகளும் உண்மையான செய்திகளையே நாம் பிரசுரிப்போம் நீங்கள் உங்கள் கருத்துக்களை எழுத விரும்பின் எமது மின் அஞ்சலுடன் தொடர்பு கொள்ளவும் .

இணையத்தள   ஆசிரியர் ,

"நன்மை செய்யும் நல்லோர் வழியில் நாமும் நடைபயில்வோம் "

New Girls Toilet

ஆயிரம் பாடசாலைகளுக்கான அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் எமது கல்லூரியில் பெண்பிள்ளைகளுக்கான மலசலகூடத்தொகுதியொன்று அமைப்பதற்கு மத்திய கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளது. சுமார் எட்டு லட்சம் ரூபா செலவில் அமையவுள்ள இம்மலசலகூடத்தொகுதியை பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பொறுப்பேற்றுச் செய்வதற்கான ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது பெண்பிள்ளைகளின் மலசலகூடப்பற்றாக்குறை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளை கல்லூரியில் ஏற்கனவேயுள்ள பெண் பிள்ளைகளின் மலசலகூடத்தொகுதி சென்றாண்டில் முற்றாகப் புணரமைப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Baden Powell Day

எமது கல்லூரியின் சாரணர் சங்கத்தினரால் பேடன் பவல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சாரணர் கொடியேற்ற நிகழ்வினைத் தொடர்நது அவர்கள் அணிவகுத்து கொடி மரியாதை செலுத்தினர். 
கல்லூரி அதிபர் பேடன் பவல் அவர்களின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்தார்.
சாரணர் பொறுப்பாசிரியர் திரு. செ. சிவகுமாரன், பெண் சாரணர் பொறுப்பாசிரியர் திருமதி.தி. கதிர்காமநாதன், கல்லூரி அதிபர் ஆகியோரின் உரைகள் மற்றும் சாரணர்களின் பேச்சு, பாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

Friday, 22 February 2013

இத்தாலி அனுப்புவதாகக் கூறி 50 இலட்சம் ரூபா பணமோசடி

இத்தாலி நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ். சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம்50 இலட்சம் ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
அம்மோசடி தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இத்தாலி நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா பணத்தினைப் பெற்று ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

Tuesday, 19 February 2013

வடக்கு கிழக்கில் கடந்த 5 வருடங்களில் 112 பாடசாலைகள் மூடப்பட்டன; கல்வி அமைச்சர்

இலங்கையில் கடந்த 5 வருடங்களுள் 350 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வடக்கு கிழக்குப் பகுதிகளில் 112  பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 350 அரசாங்கப் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.  
குறித்த பாடசாலைகளுக்கு வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படாததாலேயே பாடசாலைகள் மூடப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. எனினும் அதனை கல்வி அமைச்சர் நிராகரித்தார்.
அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டதற்கு மாணவர்களின் வருகை வீதம் குறைந்தமை, யுத்தம், பிரபலமான பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றமை, வீதி அபிவிருத்தி செய்யப்பட்டமை போன்றனவே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி 2005இல் 39 பாடசாலைகளும், 2006இல் 40 பாடசாலைகளும், 2007இல் 74 பாடசாலைகளும், 2008இல் 14 பாடசாலைகளும், 2009இல் 104 பாடசாலைகளும், 2010இல் 79 பாடசாலைகளும் மூடப்பட்டன.
இருப்பினும் 2009 இல் மூடப்பட்ட பாடசாலைகளில் மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளே அதிகமாகும்.
எனினும் இந்தக் காலப்பகுதியில் எந்தவொரு தேசிய பாடசாலையும் மூடப்படவில்லை எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Monday, 18 February 2013

Dr Manoharan - வைத்தியசாலைக்கு நன்கொடை

வலிகாமம் மேற்கு பகுதியின் சிறந்த மருத்துவமனையாக விளங்கும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அவுஷ்திரேலியாவை வசிப்பிடமாகவும்,சுழிபுரம் மத்தி சமூக சேவையாளர் திரு . அப்பாத்துரை விதானையாரின் பேரனும் ஆன DR.மனுநீதி -மனோகரன் அவர்கள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அத்தியாவசிய தேவையான பல இலட்சம் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சையின் போது
மயக்கமருந்து கொடுக்கும் இயந்திரத்தை வைத்தியசாலையின் DR. சுரேந்திரகுமாரிடம் நன்கொடையாகக் கொடுத்துள்ளார் .DR. மனோகரன் அவர்கள் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவன் திரு .மனுநீதி அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .இவரின் இச்சேவையைப் போல் வெளிநாடுகளில் வசித்துவரும் எமது சுழிபுரம் கிராம வைத்தியர்கள் மூளாய் வைத்தியசாலையை மேலும் ஒரு சிறந்த மருத்துவமனையாகக் கொண்டுவருவதற்கு முன்வர வேண்டும் .
"மக்கள் சேவையே மாண்புமிகு சேவையாகும்"
யுகே பழைய மாணவர் சங்கம் .
See Photo

Saturday, 16 February 2013

Sports meet 2013

The Victoria College Sports Meet held today was a resounding success.  Luckily after yesterdays heavy rain, the day was clear and rain free.  Approximately 7000 parents, relatives, friends and
students attended the event.  The Chief Guests commended the event organisers and were impressed by the number of people who came to support the event and the participating students. They also praised the foreign OSAs on how they worked together and funded to organise this event. Equally proud parents watched their children and thoroughly enjoyed the Interval Performance and the sports activities.  
250 students performed in the interval programme.  The performance went very smoothly under the guidance of the dance teachers and the students followed the routine with great finesse.  The audience were very appreciative. 
Today’s Sports Meet was another milestone in the Victoria College History.
UK OSA is honoured to have been able to support this event.  This event has
made Victoria College stand out from the other colleges and be proud.  Once again they have proved it that Victorians are the best.
First time in Victoria College history UK OSA web development team delivered the
Electronic invitation.  This was delivered to almost 700 people (including facebook friends of JVC OSA Community).  Out of 700, 683 people viewed the invitation.  OSA web team is proud to have found the path to communicate and inform the OSA members of what our students, teachers and the event organisers are capable of.   


Please visit this site again,
More Videos to follow. 

Thursday, 14 February 2013

Electronic Invitation - Sports meet & Interval performance program

The School Community invites you to our Annual Inter-house Athletic Meet 2013 and spectacular sports meet interval performance.  For the very first time ever in our school history, 250 students are simultaneously taking part in the interval performance program.  Come and see our talented students and what they are capable of both on the track participating in the sports meet and performing during the interval under the guidance of our equally talented teachers and co-ordinators. 

As a School of modern times we are proud to be sending you our first ever electronic invitation for the sports meet.  Please click the icon below to see further information.
Please forward this information amongst your friends and family circle.  The OSA Web Team has set a target of 1000 people to see this invitation. Our interest is to inform as many people as we can about our students abilities and their determination to succeed.
This program has been jointly co-ordinated and sponsored by Australia, Canada and UK OSA.

Wednesday, 13 February 2013

சிரம தானம்

பாடசாலை மாணவர்கள் வருடாந்த மெய்வல்லுனர் போட்டிக்காக பாடசாலை சூழலை சுற்றப்படுத்தும் புகைப்படங்கள் .

 

Sportsmeet Invitation



வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

2013 ஆம் ஆண்டிற்கான சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்
போட்டி எதிர்வரும் 16.02.2013 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது .இந்த இல்ல விளையாட்டுப்போட்டி எமது கல்லூரியின் அதிபர் வ .ஸ்ரீகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது .

பிரதம விருந்தினராக பிரதேசக்கல்வி அதிகாரி திரு .ச .சந்திரராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.இப்போட்டிகளில் நான்கு இல்லங்களையும் சேர்ந்த மாணவர்கள் கடும் போட்டிகளின் மத்தியில் மைதானத்தில் போட்டிகளில் பங்குபற்ற உள்ளார்கள் . 

இப்போட்டிகளை மேலும் சிறப்பிக்கும் நோக்கமாக எமது கல்லூரியின் 250 மாணவர்களைக் கொண்ட நடனக்கலை நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறவுள்ளது .இந் நடனக்கலை நிகழ்ச்சிகள் கல்லூரியின் ஆசிரியர்கள் தமது சிரமத்தைப் பாராது மாணவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து கலையை வெளிப்படுத்தவுள்ளார்கள். 

இவ்வரும் நடன நிகழ்ச்சி முதன் முறையாக குடாநாட்டில் நடைபெற உள்ளது.இதைப் பார்த்து மகிழ்வதற்காக வலிகாமம் மக்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.நிகழ்ச்சிக்கு புலம் பெயர்ந்து வாழும் பழைய மாணவர் ஒன்றியங்கள் அனுசரணை வழங்க முன்வந்துள்ளனர்.எமது யுகே பழைய மாணவர் ஒன்றியமும் தங்கள் அனுசரணையை வழங்க உள்ளது.எமது கல்லூரி மாணவர்களின் கல்விக்கும்,விளையாட்டிற்கும்,கலைப்பாடங்களிற்கும் தகுந்த வளர்ச்சிக்கும் எமது ஒன்றியம் தொடர்ந்தும் தமது ஆதரவை நல்கும்.

மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்போட்டி சிறப்பாக நடைபெற யுகே பழைய மாணவர் ஒன்றியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொன்கின்றது. 

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See 250 of our students getting ready for the interval program.





Tuesday, 12 February 2013

Rahini family's Visit - More photo received

எமது கல்லூரியில் க.பொ.த உயர்தர வி்ஞ்ஞானப்பிரிவு மாணவி ஒருவரின் கல்வித் தேவைகளுக்காக கல்லூரியின் பழைய மாணவியான திருமதி.றோகினி மாதாந்த உதவித் தொகை வழங்கி வருகின்றார்.

அண்மையில் திருமதி.றோகினி  குடும்பத்தினரும் திருமதி.றாகினி சிவகுமாரும் கல்லூரிக்கு வருகை தந்து உதவி பெறும் மாணவியுடன் கலந்துரையாடி கற்றலுக்காக அவரை ஊக்குவி்த்தனர். கல்விக்காக தொடர்ந்தும் அம்மாணவிக்கு தமது உதவி கிடைக்கும் என உறுதியளித்தனர். றோகினியும் றாகினியும் பண்ணாகம், வைத்திய கலாநிதி அமரர்.கைலாசப்பிள்ளை அவர்களின் புதல்விகளாவர்.


Victorians Champion

பொன்னாலை சனசமூகநிலையத்தால் நடாத்தப்பட்ட 10 பரிமா ற்றங்கள் கொண்ட கிரிகெட் சுற்றுப்போடியில் சுழிபுரம் விக்டோரியான்ஸ்  விளையாட்டுக்  களகம்  சம்பியன் ஆனது .

Monday, 11 February 2013

Netball Competition

சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் வலைப்பந்தாட்டப் போட்டியொன்றை இன்று நடாத்தியது. 19வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான இச் சுற்றுப் போட்டியில் எமது கல்லூரியின் அணியும் கலந்து கொண்டது.

இவ்வணி தான் சந்தித்த எல்லாப்போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை யுனியன் கல்லூரியுடன் விளையாடி வெற்றி வாய்ப்பைத் தவற விட்டதால் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.


Sunday, 10 February 2013

JVC-OSA Noticeboard

136 years old Victoria College is getting stronger in the academic, athletic and cultural sectors day by day. Thanks for the principals, teachers and well wishers. This site has been created to unite all OSA's and all old students who are away from our homeland.

தை அமாவாசை : தலைமுறைகள் செழிக்க வழிபடுங்களேன

பூலோகம் வந்த முன்னோர்கள் மீண்டும் பிதுர்லோகம் செல்லும் தை அமாவாசை நாளில் புனித நீராடி, அவர்களுக்கு எள்ளும் நீரும் அளித்தால் எண்ணற்ற பலன்களும், தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கின்றன புராணங்கள். பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்திலிருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறை வேற்றாமல் இருப்பதுதான். உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர்.


அந்த உயிர்கள் படும் துன்பம், பாவங்கள் ரூபத்தில் கவனிக்க தவறியவர்களையே வந்து சேரும். நாம் எங்கு சென்றாலும் உடன் வருவது பாவபுண்ணியங்கள் மட்டுமே. பித்ரு பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஏற்படுத்தப்பட்டது நம் முன்னோர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்றவேண்டும். தேவர்களின் தேவன் அதிதியின் புதல்வரான ஆதித்யன் அதாவது சூரியன் தேவர்களில் முக்கியமானவர். கண்களுக்குப்புலப்படும் தேவன் சூரியன் ஆகையால் ஒட்டு மொத்த தேவர்களின் பிரதிநிதியாக அவரைப்போற்றுகிறோம். அமாவாசை தினத்தில் அவருக்குப்பெருமை அதிகம் அது சந்திரனோடு அவர் சேர்ந்திருக்கும் நாள் என்கின்ற வேதங்கள். சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயனம் என்றும் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் கூறப்படுகிறது. உத்தராயணத்தில் பகல் பொழுது அதிகமாக இருக்கும். வேதம் சொல்லும் அத்தனை விஷயங்களுக்கும் உலக நன்மையை ஏற்படுத்துவது என்பதோடு மட்டுமல்லாமல் திருமணம் முதலிய அன்றாட வாழ்க்கையின் செழிப்பை ஏற்படுத்தும் செயல்களையும் உத்தராயணகாலத்தில் செய்யவேண்டும். என்று தர்மசாஸ்திரம் வலியுறுத்துகிறது. சிறப்பு தரும் அமாவாசை அயனத்துக்கு ஓர் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. தெற்கே நகர்ந்தவுடன் வரும் அமாவாசை ஆடி அமாவாசை, வடக்கே நகர்ந்தவுடன் வரும் அமாவாசை தை அமாவாசை. ஆன்மிக முன்னேற்றத்துக்கு பித்ருக்களை ஆராதிப்பது கை கொடுக்கும். மனதுக்குத் தெம்பை, மனோபலம், உடல்பலம் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஆகையால் ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசையில் முன்னோர்களை வழிபட வேண்டும். முன்னோர்கள் வரும் ஆடி அமாவாசை பிதுர் எனப்படும் நம் முன்னோரின் திசை, தெற்கு. இதனால் தான், ஊரின் தென்திசையில், மயானம் அமைக்கின்றனர். சூரியனின் தென்திசை பயண காலமான ஆடி மாதம் அமாவாசையன்று, பிதுர்கள் பூமிக்கு வர ஆரம்பிக்கின்றனர். புரட்டாசி மாத அமாவாசையன்று மொத்தமாக கூடுகின்றனர். இதை, மகாளய அமாவாசை என்பர். முன்னோர்களை வழி அனுப்பும் நாள் முன்னோர்கள் தை அமாவாசையன்று, மீண்டும் பிதுர்லோகம் திரும்புகின்றனர். ஆக, ஆடி அமாவாசையன்று, முன்னோரை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இதனால் தான், 12 அமாவாசைகளும், முன்னோருக்கு திதி கொடுக்க முடியாத சூழ்நிலையில், இந்த மூன்று அமாவாசைகளுமாவது கொடுக்கட்டும் என முக்கியத்துவம் தந்துள்ளனர். எள்ளும் நீரும் போதும் முன்னோர் நம்மிடம் பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களின் தேவை, எள்ளும், நீரும் மட்டுமே. அவற்றை புண்ணியத்தலங்களுக்குச் சென்று கொடுக்க வேண்டும். அகத்தியர் தீர்த்தம், குமரி தீர்த்தம். ராமேஸ்வர தீர்த்தம் என்றெல்லாம் சொல்கிறோம். அகத்திய முனிவரின் பாதம் பட்ட இடம், பாபநாசத்திலுள்ள அகத்திய தீர்த்தம். பெருமாளும், லட்சுமியும், ராமன், சீதை எனும் மனிதர்களாகப் பிறந்து, கால் பதித்த இடம் ராமேஸ்வரம். அம்பாள் கன்னி பகவதியாக பிறந்து, பாதம் பதித்த தலம் கன்னியாகுமரி. ஞானிகள் மற்றும் தெய்வ சம்பந்தத்தால்,
 இங்கே போய் திதி கொடுக்கும் போது, நம் பாவம் மட்டுமல்ல, முன்னோர் செய்த பாவமும் தீர்ந்து, பரம்பரைக்கே நன்மை ஏற்படுகிறது. அன்னதானம் செய்யுங்கள் அது மட்டுமல்ல... அமாவாசையன்று, அன்னதானம், ஆடை தானம், அரிசி, காய்கறி தானம் செய்ய வேண்டும். இதனால், நமக்கு செல்வச்செழிப்பு உண்டாகும். நிறைந்த அமாவாசை அன்று துவங்கும் சுபநிகழ்ச்சிகளுக்கு, முன்னோரின் ஆசி கிடைக்கும். தன் முன்னோர் மோட்சம் செல்லாமல், திண்டாடுவதைக் கண்ட பகீரதன், கடும் பிரயத்தனம் செய்து, கங்கையையே பூமிக்கு கொண்டு வந்து, அவர்களுக்கு விமோசனம் அளித்தான் என்கிறது புராணம். புனித நீராடுங்கள் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தை அமாவசை சிறப்பாக வழிபடப்படுகிறது. கன்னியாகுமரி, பாபநாசம், குற்றாலம், ஏரல், திருச்செந்தூர் ,உள்ளிட்ட பகுதிகளிலும், வடக்கே வேதாரண்யம், உள்ளிட்ட கடல் சார்ந்த பகுதிகளிலும்,மறைந்த நம் முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி இறைவனை வழிபடுவது மரபு. எனவே போற்றுதலுக்கு உரிய நம் முன்னோர்களை தை அமாவாசையன்று வழிபட்டு புண்ணியத் தலங்களில் நீராடினால் எண்ணற்ற பலன்களும் புண்ணியங்களும் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

Friday, 8 February 2013

Canteen Project – Update

Work for the new canteen which started on 27thJanuary 2013 has been progressing very well.  However, this week we lost 3 days of work .  Sunday being designated as a rest day and Monday and Tuesday weather conditions were so adverse with heavy rain, the work was suspended. Work started again from Wednesday with great speed and determination to make up for the days lost.  

Tuesday, 5 February 2013

We are on Twitter and Facebook now

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தால் நடாத்தப்பட்டு வரும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் தகவல் பரிமாற்ற இணையத்தளம் அனைத்து புலம்பெயர்ந்து வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொண்டு இருக்கின்றது.
அத்துடன் நின்றுவிடாது மேலும் தகவல்களைப் பரிமாறும் முகமாக எமது இணையத்தளம்( Face Book) நேர்முக இணையத்தளம் (Jvc Osa-Community), மற்றும் ‘Twitter (@JVCOSA)’ மூலமாகவும் விக்ரோறியாக்கல்லூரியின் செய்திகளை பலவழிகளிலும் அறிந்துகொள்ள முடியும் .என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் இத்தகைய வேலைத்திட்டங்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும் .
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை உண்டேல் அனைவர்க்கும் உயர்வு "
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Sunday, 3 February 2013

எஸ். சிவானந்தன் மீண்டுமொருமுறை தனது புகழ் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

தொல்புரம் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் விக்டோரியா கல்லூரியின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவருமான கலாநிதி. எஸ். சிவானந்தன் மீண்டுமொருமுறை தனது புகழ் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளார். யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான இவர், யாழ் மருத்துவ பீ டத்திலே உயிர் இரசாயனவில பிரிவில் விரிவுரையாளராக்க் கடமையாற்றியவர்.
தனது கலாநிதிக் கற்கை நெறியினை சுவீடன் மற்றும் சுவிஸ்லாந்தில் மேற்கொண இவர் தனது புதிய கண்டு பிடிப்பின் மூலம் உலகளாவிய ரீதியில் பேசப்படவர்.

தற்போது  அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் இவர் மேலும் ஒரு கௌரவத்தை பெற்றுள்ளார்.

பாடசாலை  மீது மாறாத அன்பும் அக்கறையும் கொண்ட இவர், தற்போது  அவுஸ்திரேலியா பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து செயற் படுவதோடு கடந்த காலங்களில் சுழிபுரம் பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More
 

குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம்

பாடசாலை செல்லும் மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு யாழ். மாவட்ட பொது அமைப்புகள் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், குற்றச் செயல்களை அடுத்தே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரை அண்மித்த பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவி மீது பாடசாலை சிற்றூழியரால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகத்தைத் தொடர்ந்து அவசர அவசரமாக பாடசாலைகள் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
யாழ்.நகரை அண்டிய மற்றும் குடாநாட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களைப் பெற்றோர்கள் உரியமுறையில் பாதுகாப்பாகப் பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதன்போது மாணவர்களை பாடசாலைக்கு மிகவும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவது பெற்றோர்களின் கடமை. பாடசாலை முடிவடைந்ததும் உடனடியாக மாணவர்களைக் கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கற்றல் நடவடிக்கையின் பின் மாணவர்கள் தேவையற்ற விதத்தில் வீதியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை மாணவிகள் தங்க ஆபரணத்திற்குப் பதிலாக "கவரிங்' ஆபரணங்களை அணிய வேண்டும் என்றும் சில பாடசாலைகளில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.       
குடாநாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், குற்றச் செயல்களை அடுத்தே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Saturday, 2 February 2013

Canteen கண்ணோட்டம் (இவர்களின் கனவு நனவாகின்றது)

எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 136 வருடங்கள் ஆகிவிட்டஇக் காலப்பகுதியில் எத்தனை இலட்சம் மாணவர்கள் தமது கல்லூரிப்படிப்பை முடித்து வெளியேறி இருப்பார்கள் இவர்கள் கல்விகற்ற காலப்பகுதியில் எமது கல்லூரிக்கு அனைத்து சுகாதார வசத்திகளும் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்று இல்லாதிருந்தது அசௌகரியமாகவே இருந்திருக்கும் .இந்த நிலையை ஈடுசெய்யும் வகையில் கல்லூரிக்கு ஒரு சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்காக யுகே பழைய மாணவர் ஒன்றியம் முன்வந்துள்ளது .



யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் முன்னைய நிர்வாக சபையின் பொருளாளர் திரு .மனோகரன் அவர்கள் .ஐப்பசி மாதம் 2011 ஆம் ஆண்டு எமது கல்லூரிக்கு சென்றிருந்த போது கல்லூரி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் எமது கல்லூரிக்கு ஓர் சிற்றுண்டிச்சாலை தேவை என்பதை விடுத்துள்ளார்கள் .கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரு .மனோகரன் அவர்கள் ஒன்றியத்தின் நிர்வாக சபைக் கூட்டத்தில் இக் கோரிக்கையை முன்வைத்தார் .
இக்கூட்டத்தின் தலைவர் திரு .உலகநாதன் அவர்கள் செயலாளர் திரு .ஜெயச்சந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முடிவு எடுத்தார்கள் .
 அப்போது தமது நிர்வாகத்தின் கையிருப்பில் இருந்த பணத்தை சிற்றுண்டிச்சாலை கட்டுவதற்கு உரிய செலவிற்கு பயன்படுத்துவதற்காக தீர்மானம் எடுத்தார்கள். இத்தகவலை செயலாளர் திரு .ஜெயச்சந்திரன் அவர்கள் கல்லூரி அதிபருடன் 03/03/2012 அன்று தொடர்பு கொண்டு நிர்வாகத்தின் முடிவைத்தெரிவித்தார் .
அதன் பின்னர் யுகே ஒன்றியத்தின் பொதுக்கூட்டத்தில் ( 10/03/2012 அன்று) புதிய நிர்வாகம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது .

பழைய நிர்வாகத்தின் சிற்றுண்டிச்சாலை கட்டும் திட்டத்தைபுதிய நிர்வாகம் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடிவு எடுத்தது .கையிருப்பில் இருக்கும் பணத்தைக்கொண்டு சிற்றுண்டிச்சாலை கட்டுவதற்கு முடிவெடுத்த வேளையில் பணம் போதாத காரணத்தினால் நிர்வாக சபை உறுப்பினரான திரு .ரவிசங்கர் அவர்கள் யுகேயில் வசித்துவரும் நிறுவக முகாமையாளர் செல்லப்பா முதலியார் குடும்பத்துடன் தொடர்புகொண்டு அவர்களையும் இத்திட்டத்திற்கு உள்வாங்கிக்கொண்டு அவர்களின் உதவியுடன் இச் சிற்றுண்டிச்சாலை கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இந்த சிற்றுண்டிச்சாலை கட்டும்திட்டத்தை ஆரம்பித்து வைத்த எமது  முன்னைய நிர்வாகசபை தலைவர், காரியதரிசி, பொருளாளர் மற்றும் செயல்குழு உறுப்பினர்களின் கனவு இப்போது நனவாகிக் கொண்டு உள்ளது. இவர்களுக்கு  கல்லுரி சமூகம் தனது மனமுவந்த நன்றியை தெருவித்துக்கொள்ளுகிறது .


இத்திட்டத்திற்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலரும் தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும்  தங்களால் இயன்ற உதவியைச் செய்ய முன்வந்துள்ளனர் . இத்திட்டத்திற்கு யாராயினும் உதவி செய்ய விரும்பினால் யுகே பழைய மாணவர் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளவும் .
 நன்றி ,

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Friday, 1 February 2013

பரீட்சை பெறுபேறின் மீளாய்வு

தற்போது வெளியிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறின் படி அதனை மீளாய்வு செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பங்கள் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை மீளாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுபேறுகளுடன் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும்.



தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 5ஆம் திகதி தேசிய பத்திரிகைகளில் வெளியாகும் மாதிரி விண்ணப்பபடிவத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீடசைகள் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது. 

இதேவேளை, வெளிநாடு செல்லும் தேவைகளுக்காக ஒரே நாளில் உயர்தரப் பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணம் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றில் உயர்கல்வியைத் தொடர்தல் போன்ற காரணிகளுக்காக பரீட்சை சான்றிதழ்கள் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளன.

பெறுபேறு வெளியிடப்பட்ட தினத்திற்கு மறுநாள் முதல் இந்த ஒருநாள் சேவை அமுல்படுத்தப்பட உள்ளது.